ஸ்டேன்லேக்கின் பந்தில் நெஞ்சில் செம அடி வாங்கிய ஆஸ்திரேலிய வீரர்.. சுருண்டு விழுந்த பரிதாபம்.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 25, 2020, 12:16 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவின் முதல் தர கிரிக்கெட் தொடரில் பில்லி ஸ்டேன்லேக்கின் பந்தில் பேட்ஸ்மேன் ஒருவர் நெஞ்சில் செம அடி வாங்கிய சம்பவம், பார்ப்பவர்களையே பதைபதைபக்க வைக்கிறது. 
 

ஆஸ்திரேலியாவின் முதல் தர கிரிக்கெட் தொடரான ஷேஃபெர்டு ஷீல்டு கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. இதில் விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய விக்டோரியா அணி, செப் கோட்ச்சின் சதம் மற்றும் மேத்யூ ஷார்ட் அடித்த 98 ரன்களின் விளைவாக முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய குயின்ஸ்லாந்து அணி வெறும் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 146 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது விக்டோரியா அணி. 

Also Read - மெல்பர்னை மிஞ்சிய உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் சிறப்பம்சங்கள்

இந்த போட்டியில் குயின்ஸ்லாந்து அணியில் ஆடுகிறார் ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர் பில்லி ஸ்டேன்லேக். அவரது பவுலிங்கில் விக்டோரியா வீரர் மேத்யூ ஷார்ட் நெஞ்சில் படுமோசமாக அடி வாங்கினார். ஸ்டேன்லேக் வீசிய பவுன்ஸரின் லெந்த்தை சரியாக கணிக்க தவறினார் மேத்யூ ஷார்ட். அதனால் அந்த பந்து அவரது நெஞ்சில் பலமாக அடித்தது. உடனே சுருண்டு கீழே விழுந்தார் ஷார்ட். இதையடுத்து ஃபிசியோ களத்திற்கு வந்து அவரை பரிசோதித்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக காயமோ, பயப்படும்படியாக எதுவும் பாதிப்போ இல்லாமல் தப்பினார் ஷார்ட். அந்த வீடியோ இதோ..

Not the kind of delivery ANYONE wants to face!

Thankfully, Matt Short is all right and batting on at the Gabba after this brute of a bouncer from Billy Stanlake pic.twitter.com/WGdekIChde

— cricket.com.au (@cricketcomau)
click me!