#BANvsAUS ஆஸி., அணி ஆறுதல் வெற்றி! ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி ஷகிப் அல் ஹசனை கதறவிட்ட கிறிஸ்டியன்

Published : Aug 08, 2021, 02:57 PM ISTUpdated : Aug 08, 2021, 02:58 PM IST
#BANvsAUS ஆஸி., அணி ஆறுதல் வெற்றி! ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி ஷகிப் அல் ஹசனை கதறவிட்ட கிறிஸ்டியன்

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.  

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, முதல் 3 போட்டிகளில் தோற்று தொடரை இழந்தது. ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் 4வது டி20யில் இறங்கியது ஆஸ்திரேலிய அணி.

4வது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் வெறும் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரே அடித்தனர். அதுவும் அவர்களும் அதிகபட்சம் இருபதுகளில் ஆட்டமிழந்தனர். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால், 20 ஓவரில் 104 ரன்கள் மட்டுமே அடித்தது வங்கதேச அணி.

105 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 3ம் வரிசையில் இறங்கிய டேனியல் கிறிஸ்டியன், ஷகிப் அல் ஹசன் வீசிய 4வது ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி அந்த ஒரே ஓவரில் 30 ரன்களை குவித்தார்.

கிறிஸ்டியன் 15 பந்தில் 39 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவர் ஒரே ஓவரில் 30 ரன்களை குவித்தார். அதன்பின்னர் வேறு எந்த வீரரும் சரியாக ஆடாததால், 105 ரன்கள் என்ற எளிய இலக்கையே 19வது ஓவரில் தான் எட்டியது ஆஸ்திரேலிய அணி. தொடரை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு இது ஆறுதல் வெற்றிதான்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?
ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!