ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 14ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது.
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா இதுவரையில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவியது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றியை பெற்றது. இதே போன்று தான் இலங்கை விளையாடிய 2 போட்டிகளிலும் போராடி தோல்வி அடைந்துள்ளது. உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டிக்கு புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் முன்னேறும்.
இந்த நிலையில் தான் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவும், புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ள இலங்கையும் இன்றைய போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளும் இதற்கு முன்னதாக 103 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 63 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 36 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 4 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
இதே போன்று உலகக் கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் 11 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இலங்கை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. மேலும் ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.
ஏற்கனவே காயம் காரணமாக இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனாகா அணியிலிருந்து வெளியேறிவிட்டார். அவருக்குப் பதிலாக சமீகா கருணாரத்னே அணியில் இடம் பெற்றுள்ளார். குசால் மெண்டிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D