
ஆசிய கோப்பை கிரிக்கெடின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும், ஓமனும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஓமனை பொறுத்தவரை பெயர் வேறாக இருந்தாலும் அந்த அணியை குட்டி இந்திய அணி என்றே குறிப்பிடலாம். ஏனெனில் 5 இந்திய வம்சாவளி வீரர்கள் ஓமன் அணியில் விளையாடி வருகின்றனர்.
ஓமன் அணியின் கேப்டன் ஜிதேந்தர் சிங் இந்தியாவை சேர்ந்தவர் தான். பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த இவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு 2003ல் ஓமனுக்கு குடிபெயர்ந்தார். ஓமன் அணிக்காக 61 ஒருநாள் போட்டிகளிலும், 66 டி20 போட்டிகளிலும் விளையாடி, 3000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
இவரும் இந்தியாவைச் சேர்ந்தவர். வினாயக் சுக்லா 2021ல் இந்திய கிரிக்கெட்டை விட்டு விலகினார். இவர் 2024ல் ஓமன் அணிக்காக அறிமுகமானார், 8 ஒருநாள் போட்டிகளிலும், 10 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஆர்யன் பிஷ்ட் - ஆல்-ரவுண்டர்
இவர் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 ஒருநாள் போட்டியில் ஓமன் அணிக்காக சமீபத்தில் அறிமுகமானார். இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், ஆசிய கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக ஒரு டி20 போட்டியிலும் ஆர்யன் பிஷ்ட் விளையாடியுள்ளார்.
சமேய் ஸ்ரீவஸ்தவா - லெக் ஸ்பின்னர்
இந்தியாவின் போபாலைச் சேர்ந்த சமேய் ஸ்ரீவஸ்தவா, ஓமன் அணிக்காக 12 ஒருநாள் போட்டிகளிலும், 17 டி20 போட்டிகளிலும் விளையாடி, 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கரண் சோனவாலே - ஆல் ரவுண்டர்
மும்பையில் பிறந்தவரான பேட்டிங் ஆல்-ரவுண்டர் கரண், ஓமன் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஓமன் அணிக்காக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.