
ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த 2ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று போட்டியில் தகுதிபெறும் அணி ஆகிய 3 அணிகளும் ஏ பிரிவிலும், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு..! ஆகஸ்ட் 28ல் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ம் தேதி மோதுகின்றன. ஏ பிரிவில் இடம்பெறப்போகும் 3 அணியை தீர்மானிக்கும் தகுதிச்சுற்று போட்டி அட்டவணையை பார்ப்போம்.
ஏ பிரிவில் 3வது அணியாக இடம்பெற, சிங்கப்பூர், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய 4 அணிகளும் மோதுகின்றன. இவற்றில் ஒரு அணி தான் ஆசிய கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் மோதும் வாய்ப்பை பெறும்.
இதையும் படிங்க - WI vs IND: 4வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! என்னென்ன மாற்றங்கள்..?
தகுதிச்சுற்று போட்டி அட்டவணை:
ஆகஸ்ட் 20: சிங்கப்பூர் - ஹாங்காங்
ஆகஸ்ட் 21: ஐக்கிய அரபு அமீரகம் - குவைத்
ஆகஸ்ட் 22: ஐக்கிய அரபு அமீரகம் - சிங்கப்பூர்
ஆகஸ்ட் 23: குவைத் - ஹாங்காங்
ஆகஸ்ட் 24: சிங்கப்பூர் - குவைத்
ஆகஸ்ட் 24: ஹாங்காங் - ஐக்கிய அரபு அமீரகம்