WI vs IND: 4வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! என்னென்ன மாற்றங்கள்..?

By karthikeyan VFirst Published Aug 4, 2022, 4:22 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

4வது போட்டி வரும் 6ம் தேதியும், கடைசி டி20 போட்டி 7ம் தேதியும் நடக்கின்றன. 6ம் தேதி ஃப்ளோரிடாவில் நடக்கும் 4வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், 4வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகின்றன.

இதையும் படிங்க - இந்திய அணிக்கு இதைவிட நல்ல செய்தி இருக்கமுடியாது..! ரோஹித் சர்மா குறித்த முக்கியமான அப்டேட்

4வது டி20 போட்டிக்கான  இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 3வது போட்டியில் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது காயத்தால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறிய கேப்டன் ரோஹித் சர்மா, காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸை அடைந்துவிட்டார். எனவே அவர் கடைசி 2 டி20 போட்டிகளில் ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் இந்திய அணி காம்பினேஷனில் வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். 4வது டி20 போட்டியிலும் தீபக் ஹூடா ஆடுவார்.

இதையும் படிங்க - இதெல்லாம் நல்லதுக்கு இல்லப்பா; ரொம்ப தப்பு.. கேப்டன் ரோஹித்தை எச்சரிக்கும் ரவி சாஸ்திரி

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.
 

click me!