#INDvsENG டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் ரெக்கார்டை தகர்த்த அஷ்வின்

By karthikeyan VFirst Published Feb 8, 2021, 10:29 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ரெக்கார்டை சமன் செய்துள்ளார் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
 

இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் அடிக்க, இந்திய அணி 337 ரன்கள் அடித்தது. 241 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து இந்திய அணி 420 ரன்கள் என்ற இலக்கை கடைசி இன்னிங்ஸில் விரட்டிவருகிறது.

இங்கிலாந்து அணியை 178 ரன்களில் சுருட்ட முக்கிய காரணம் அஷ்வின். ரோரி பர்ன்ஸ், சிப்ளி, ஸ்டோக்ஸ், பெஸ், ஆர்ச்சர், ஆண்டர்சன் ஆகிய ஆறு வீரர்களையும் வீழ்த்தினார். அஷ்வின் 61 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் 28வது முறையாக ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவில் அஷ்வின் 22வது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் சொந்த மண்ணில் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்தியதில் ஆண்டர்சனின்(22 முறை) சாதனையை சமன் செய்தார் அஷ்வின்.

சொந்த மண்ணில் அதிகமுறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் முத்தையா முரளிதரன்(45), ரெங்கனா ஹெராத்(26), அனில் கும்ப்ளே(25) ஆகிய மூவருக்கு அடுத்த 4வது இடத்தில் உள்ளார் அஷ்வின். கும்ப்ளே, ஹெராத்தை அஷ்வின் முந்திவிடுவார். ஆனால் முரளிதரனை முந்துவது சாதாரண காரியமல்ல.
 

click me!