ஹேய் ஷமி ப்ளீஸ்டா இந்த ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்திராத..! ஷமியிடம் கெஞ்சிய முன்னாள் ஃபாஸ்ட் பவுலர்

By karthikeyan VFirst Published Feb 5, 2021, 7:55 PM IST
Highlights

தனக்கும் ஷமிக்கும் இடையேயான நட்பு குறித்து மனம் திறந்துள்ளார் அசோக் டிண்டா.
 

இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் அசோக் டிண்டா. இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் ஆடி முறையே 12 மற்றும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைத்திராத அசோக் டிண்டா, முதல் தர கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட சிறந்த பவுலர்.

முதல் தர கிரிக்கெட்டில் 116 போட்டிகளில் ஆடி 420 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெங்கால் அணியில் நீண்ட காலம் ஆடிய அசோக் டிண்டா, கடைசியாக கோவாவிற்காக ஒரு தொடரில் ஆடினார். கடந்த ஆண்டு ரஞ்சி தொடர் நடக்காத நிலையில், அனைத்துவகையான போட்டிகளிலிருந்தும் கடந்த 2ம் தேதி ஓய்வு அறிவித்தார் அசோக் டிண்டா.

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ்கீடாவிற்கு அளித்துள்ள பேட்டியில், தனக்கும் தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர பவுலராக ஜொலிக்கும் ஷமிக்கும் இடையேயான நட்பு மற்றும் சுவாரஸ்யமான சம்பவம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

பெங்கால் அணிக்காக தானும் ஷமியும் இணைந்து ஆடியபோது நடந்த சம்பவம் குறித்து பேசிய அசோக் டிண்டா, ரஞ்சி தொடரில் சத்தீஸ்கருக்கு எதிரான ஒரு போட்டிதான், எனது 100வது முதல் தர கிரிக்கெட் போட்டி. அந்த போட்டியில் நானும் ஷமியும் சிறப்பாக பந்துவீசியதன் விளைவாக இரண்டே நாட்களில் அந்த போட்டியில் வெற்றி பெற்றோம். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 2 பேருமே தலா ஐந்து விக்கெட் வீழ்த்தினோம்.

2வது இன்னிங்ஸில் 2 பேருமே தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தோம். கடைசி விக்கெட் மட்டும் மீதமிருந்தபோது, அந்த விக்கெட்டை வீழ்த்தினால், 2வது இன்னிங்ஸிலும் ஐந்து விக்கெட் வீழ்த்தியதுடன், அந்த போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திவிடுவேன். எனது 100வது முதல் தர கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வீழ்த்த விரும்பிய நான், ஷமியிடம் சென்று, இதுவரை நான் உன்னிடம் எதுவும் கேட்டதில்லை. இப்போது ஒன்றே ஒன்று கேட்கிறேன். இந்த விக்கெட்டை நீ வீழ்த்திவிடாதே.. நான் வீழ்த்துகிறேன் என்று 10 விக்கெட் வீழ்த்தும் எனது விருப்பத்தை தெரிவித்தேன். அதற்கு ஷமியும் உடன்பட, அந்த விக்கெட்டை நான் வீழ்த்தினேன். அதற்காக ஷமிக்கு நன்றியும் தெரிவித்தேன் என்று நெகிழ்ச்சியுடன் பழைய நினைவை நினைவுகூர்ந்தார் அசோக் டிண்டா.
 

click me!