நா ரெடி தான் வரவா, ஜோர்தலே என்று வெரேட்டி சாங்ஸ் பாடிய அசல் கோலார்: கலர்புல்லாக கலைகட்டிய டிஎன்பிஎல் ஃபைனல்!

By Rsiva kumar  |  First Published Jul 13, 2023, 12:08 AM IST

டிஎன்பிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் அசல் கோலார் ஜோர்தலே உள்ளிட்ட வெரேட்டி வெரேட்டி பாடல்களை பாடி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரின் 7ஆவது சீசன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், இடம் பெற்ற 8 அணிகளில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு வந்தன.

 

We are in for a Grand final and closing ceremony! 🤩
மிஸ் பண்ணிடாதிங்க மக்களே!🏏💥💪🏼 pic.twitter.com/ULCch5KL1X

— TNPL (@TNPremierLeague)

Tap to resize

Latest Videos

 

TNPL 2023 Final: 2ஆவது முறையாக சாம்பியனான லைகா கோவை கிங்ஸ்!

திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் நிறுவனத்தின் மைதானத்தில் இந்தப் போட்டி நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பிக்பாஸ் புகழ் அசல் கோலார் கலந்து கொண்டு நா ரெடி தான் வரவா, ஜோர்தலே என்று வெரேட்டி வெரேட்டி பாடல்களை பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதோடு, நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் அரங்கேறியது. டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.

ஜதாவேத் சுப்பிரமணி 4 விக்கெட், டிஎன்பிஎல் ஃபைனலில் நெல்லையை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி!

இது தொடர்பான வீடியோவை தமிழ்நாடு பிரீமியர் லீக் தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் 57 ரன்கள் சேர்த்தார். இதில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். ஆதிக் உர் ரஹ்மான் 50 ரன்கள் சேர்த்தார். இதில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். மற்றொரு வீரர் முகிலேஷ் 51 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

TNPL 2023 Final: சுரேஷ் குமார், ஆதிக் உர் ரஹ்மான் அதிரடி: டிஎன்பிஎல் ஃபைனலில் 205 ரன்கள் குவித்த LKK!

இதையடுத்து கடின இலக்கை துரத்திய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர் ஸ்ரீ நெரஞ்சன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஜிதேஷ் குருசுவாமி 1 ரன்னிலும், தொடக்க வீரர் அருண் கார்த்திக் 27 ரன்னிலும், நிதிஷ் ராஜகோபால் 13 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே நெல்லை ராயல் கிங்ஸ் 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

எனக்கு அது வேணாம், இது ஓகே; அடம் பிடித்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் வீடியோ!

இந்த வெற்றியின் மூலமாக தொடர்ந்து 2ஆவது முறையாக லைகா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் டைட்டில் வென்றுள்ளது. லைகாவைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் ஜதாவேத் சுப்பிரமணியன் 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கேப்டன் ஷாருக்கான் 3 விக்கெட்டும், கௌதம் தாமரைக் கண்ணன் மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

ட்ரீம் 11 ஜெர்சியுடன் டாப் பேட்ஸ்மேன்கள்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 2ஆவது முறையாக லைகா கோவை கிங்ஸ் டைட்டில் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற லைகா கிங்ஸ் அணிக்கு ரூ.50 லட்சமும், 2ஆவது இடம் பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

பாகுபலி மியூசிக்குடன் வைரலாகும் டிஎன்பிஎல் கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை வீடியோ: கோவையா? நெல்லையா?வெற்றி யாருக்கு?

 

click me!