டிஎன்பிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணி தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் டிராபியை கைப்பற்றியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7ஆவது சீசனுக்கான இறுதிப் போட்டி திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் நிறுவன மைதானத்தில் இன்று நடந்தது. நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ஜதாவேத் சுப்பிரமணி 4 விக்கெட், டிஎன்பிஎல் ஃபைனலில் நெல்லையை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி!
லைகா கோவை கிங்ஸ்:
எஸ் சுஜய், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), பி சச்சின், யு முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), ராம் அரவிந்த், ஆதிக் யுஆர் ரஹ்மான், எம் முகமது, மணிமாறன் சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், வள்ளியப்பன் யுதீஸ்வரன்
நெல்லை ராயல் கிங்ஸ்:
அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருசுவாமி, நிதிஷ் ராஜகோபால், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், சோனு யாதவ், என்.எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, எஸ் மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்ஷய் ஜெயின் எஸ்
இதில், லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் 57 ரன்கள் சேர்த்தார். இதில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். ஆதிக் உர் ரஹ்மான் 50 ரன்கள் சேர்த்தார். இதில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். மற்றொரு வீரர் முகிலேஷ் 51 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
எனக்கு அது வேணாம், இது ஓகே; அடம் பிடித்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் வீடியோ!
இதையடுத்து கடின இலக்கை துரத்திய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர் ஸ்ரீ நெரஞ்சன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஜிதேஷ் குருசுவாமி 1 ரன்னிலும், தொடக்க வீரர் அருண் கார்த்திக் 27 ரன்னிலும், நிதிஷ் ராஜகோபால் 13 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே நெல்லை ராயல் கிங்ஸ் 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
ட்ரீம் 11 ஜெர்சியுடன் டாப் பேட்ஸ்மேன்கள்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!
இந்த வெற்றியின் மூலமாக தொடர்ந்து 2ஆவது முறையாக லைகா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் டைட்டில் வென்றுள்ளது. லைகாவைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் ஜதாவேத் சுப்பிரமணியன் 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கேப்டன் ஷாருக்கான் 3 விக்கெட்டும், கௌதம் தாமரைக் கண்ணன் மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி படைக்க இருக்கும் சாதனைகளின் பட்டியல்!
முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 2ஆவது முறையாக லைகா கோவை கிங்ஸ் டைட்டில் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற லைகா கிங்ஸ் அணிக்கு ரூ.50 லட்சமும், 2ஆவது இடம் பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
That's it for tnpl 2023. Superb tournament and Lyca Kovai Kings thoroughly deserving winner . Shahrukh Khan has led the side brilliantly and they have won all their games comprehensively. Easily one of the most dominant tnpl campaigns by a team pic.twitter.com/7Xm6OJxSs3
— S Dipak Ragav (@dipakragav)