ஹாட்ரிக் நோ - பால்.. டி20 கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்

By karthikeyan VFirst Published Jan 5, 2023, 8:06 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஹாட்ரிக் நோ - பால் வீசி, டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் நோ - பால் வீசிய முதல் பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று புனேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்தால் விலகிய சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராகுல் திரிபாதியும், ஹர்ஷல் படேலுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கும் களமிறங்கினர்.

PAK vs NZ: ODI தொடருக்கான பாக்.,அணி அறிவிப்பு..! ஒதுக்கப்பட்ட வீரர்களை அணிக்குள் கொண்டுவந்து அஃப்ரிடி அதகளம்

இந்திய அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, தில்ஷான் மதுஷங்கா.

இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவரும் நிலையில், முதல் ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். 2வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், அந்த ஓவரின் கடைசி பந்தில் தொடர்ச்சியாக 3 நோ-பால்களை வீசி அதிர்ச்சியளித்தார். அந்த ஒரு பந்துக்கு 3 நோ - பால்கள் வீசியதால் அந்த ஒரு பந்தில் மட்டும் 14 ரன்களை வழங்கினார். ஹாட்ரிக் நோ - பால் வீசிய முதல் பவுலர் என்ற மோசமான சாதனையையும் படைத்தார் அர்ஷ்தீப் சிங்.

2023 ஒருநாள் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? சங்கக்கரா அதிரடி

அதிரடியாக ஆடிய இலங்கை தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸும் பதும் நிசாங்காவும் இணைந்து 8.2 ஓவரில் 80 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். நிசாங்கா 33 ரன்களுக்கு அக்ஸர் படேலின் பந்தில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ், 52 ரன்களுக்கு சாஹலின் சுழலில் வீழ்ந்தார். பானுகா ராஜபக்சா 2 ரன்னுக்கு உம்ரான் மாலிக்கிடம் விக்கெட்டை இழந்தார். 13 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் அடித்து ஆடிவருகிறது இலங்கை அணி.
 

click me!