IND vs SL: 2வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

Published : Jan 05, 2023, 06:43 PM IST
IND vs SL: 2வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று புனேவில் நடக்கிறது.

இந்த போட்டியிலும் ஜெயித்து டி20 தொடரை 2-0 என வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இலங்கை அணியும் களமிறங்கியுள்ளன.

PAK vs NZ: ODI தொடருக்கான பாக்.,அணி அறிவிப்பு..! ஒதுக்கப்பட்ட வீரர்களை அணிக்குள் கொண்டுவந்து அஃப்ரிடி அதகளம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்தால் விலகிய சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராகுல் திரிபாதி ஆடுகிறார். ராகுல் திரிபாதி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த போட்டியின் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் ஆடி இந்திய அணியில் இடம்பெற்றாலும், இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பிற்காக காத்திருந்த அவரது கனவு இன்று நனவானது.

இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியில் ஆடுவதால் ஹர்ஷல் படேல் நீக்கப்பட்டுள்ளார். ஹர்ஷல் படேல் முதல் டி20 போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தாலும், அந்த அணி அடித்த 160 ரன்களில் 41 ரன்கள் ஹர்ஷல் படேல் கொடுத்தவை. 

இந்திய அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

2023 ஒருநாள் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? சங்கக்கரா அதிரடி

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, தில்ஷான் மதுஷங்கா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ENG 1st T20: இந்திய அணியில் 4 வீரர்கள் அதிரடி நீக்கம்! சஞ்சு சாம்சனுமா? பிளேயிங் லெவன்!
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!