IPL 2023: 3வது மேட்ச்சுலயே மோசமான சாதனையை படைத்த அர்ஜுன் டெண்டுல்கர்..!

By karthikeyan V  |  First Published Apr 22, 2023, 10:31 PM IST

ஐபிஎல்லில் தனது 3வது போட்டியிலேயே ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனையை படைத்துள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர்.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் முதல் 2 போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அதற்கடுத்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. 

இந்த சீசனில் கேகேஆருக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். அறிமுக போட்டியில் 2 ஓவரில் 17 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. 

Tap to resize

Latest Videos

சன்ரைசர்ஸுக்கு எதிரான அடுத்த போட்டியில் 2.5 ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் அர்ஜுன் டெண்டுல்கர். கடைசி ஓவரை பதற்றமின்றி வீசி ஒரு விக்கெட்டும் வீழ்த்தி அனைவரையும் கவர்ந்தார் அர்ஜுன். 

IPL 2023: ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோற்றது எப்படி..? நொண்டிச்சாக்கு சொல்லும் கேஎல் ராகுல்

நன்றாக பந்துவீசிவந்த அர்ஜுன் டெண்டுல்கரின் பவுலிங்கை பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் சாம் கரனும் ஜித்தேஷ் ஷர்மாவும் அடி பிரித்து மேய்ந்துவிட்டனர். மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி மும்பை வான்கடேவில் நடந்துவருகிறது.  இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 214 ரன்களை குவிக்க, 215 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டிவருகிறது.

இந்த போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 16வது ஓவரில் சாம் கரன் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்க, ஹர்ப்ரீத் சிங் பாட்டியா 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். மேலும் அந்த ஓவரில் ஒரு வைடு, ஒரு நோ பால் வீசப்பட்டதால் அர்ஜுன் டெண்டுல்கரின் அந்த ஓவரில் மட்டும் பஞ்சாப் கிங்ஸுக்கு 31 ரன்கள் கிடைத்தது. ஒரு ஓவரில் அர்ஜுன் டெண்டுல்கர் 31 ரன்களை வாரி வழங்கினார். இதன்மூலம் ஐபிஎல்லில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வழங்கிய 2வது மும்பை இந்தியன்ஸ் பவுலர் என்ற மோசமான சாதனையை அர்ஜுன் டெண்டுல்கர் படைத்தார். 

IPL 2023: என்னைய அடிச்சுக்க ஆளே இல்லடா.. டி20-யில் முதலிடம் பிடித்த தோனி..! 41 வயதிலும் தல படைத்த தரமான சாதனை

2022 ஐபிஎல்லில் கேகேஆருக்கு எதிராக ஒரு ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கிய டேனியல் சாம்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
 

click me!