
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைகின்றன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இன்றும்(பிப்ரவரி 12) மற்றும் நாளையும் (பிப்ரவரி 13) மெகா ஏலம் பெங்களூருவில் நடக்கவுள்ளது.
இந்த ஏலத்தில் 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தை இன்று (பிப்.,12) காலை 11 முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கலாம். டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் ஏலத்தை பார்க்கலாம்.
ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை ஏலமெடுக்க ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டது. 8 பழைய அணிகளும் ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்பதால், சில அணிகள் 4 வீரர்களையும், சில அணிகள் மூவரையும், பஞ்சாப் கிங்ஸ் அணி இருவரை மட்டுமே என தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துவிட்டு, மற்ற வீரர்களை விடுவித்தன.
லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சமாக 3 வீரர்களை வாங்கலாம் என்பதால், அந்த இரு அணிகளும் தலா 3 வீரர்களை எடுத்துள்ளன.
ஐபிஎல் மெகா ஏலம் குறித்த முக்கியமான தகவல்களை பார்ப்போம்.
ஐபிஎல் 2022 மெகா ஏலம்: 10 அணிகளின் கையிருப்பு தொகை
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.48 கோடி
டெல்லி கேபிடள்ஸ் - ரூ.47.5கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.48 கோடி
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ரூ.59 கோடி
மும்பை இந்தியன்ஸ் - ரூ.48 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - ரூ.72 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.62 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.57 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ.68 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - ரூ.52 கோடி
ரூ.2 கோடி அடிப்படை விலையாக கொண்ட 17 இந்திய வீரர்கள்
1. ரவிச்சந்திரன் அஷ்வின்
2. ஷிகர் தவான்
3. ஷ்ரேயாஸ் ஐயர்
4. முகமது ஷமி
5. தேவ்தத் படிக்கல்
6. சுரேஷ் ரெய்னா
7. ராபின் உத்தப்பா
8. க்ருணல் பாண்டியா
9. ஹர்ஷல் படேல்
10. தினேஷ் கார்த்திக்
11. இஷான் கிஷன்
12. அம்பாதி ராயுடு
13. தீபக் சாஹர்
14. புவனேஷ்வர் குமார்
15. ஷர்துல் தாகூர்
16. உமேஷ் யாதவ்
17. யுஸ்வேந்திர சாஹல்
ரூ.2 கோடி அடிப்படை விலையாக கொண்ட 32 வெளிநாட்டு வீரர்கள்:
1. முஜீப் ஜட்ரான் (ஆஃப்கானிஸ்தான்
2. அஷ்டான் அகர் (ஆஸ்திரேலியா)
3. நேதன் குல்ட்டர்நைல் (ஆஸ்திரேலியா)
4. பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
5. ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா)
6. மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா)
7. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
8. மேத்யூ வேட் (ஆஸ்திரேலியா)
9. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
10. ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா)
11. ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
12. முஸ்தாஃபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்)
13. சாம் பில்லிங்ஸ் (இங்கிலாந்து)
14. சாகிப் மஹ்மூத் (இங்கிலாந்து)
15. கிறிஸ் ஜோர்டான் (இங்கிலாந்து)
16. க்ரைக் ஓவர்டன் (இங்கிலாந்து)
17. அடில் ரஷீத் (இங்கிலாந்து)
18. ஜேசன் ராய் (இங்கிலாந்து)
19. ஜேம்ஸ் வின்ஸ் (இங்கிலாந்து)
20. டேவிட் வில்லி (இங்கிலாந்து)
21. மார்க் உட் (இங்கிலாந்து)
22. ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)
23. டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து)
24. லாக்கி ஃபெர்குசன் (நியூசிலாந்து)
25. குயிண்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா)
26. மார்சண்ட் டி லாஞ்ச் (தென்னாப்பிரிக்கா)
27. ஃபாஃப் டுப்ளெசிஸ் (தென்னாப்பிரிக்கா)
28. ககிசோ ரபாடா (தென்னாப்பிரிக்கா)
29. இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா)
30. ஃபேபியன் ஆலன் (வெஸ்ட் இண்டீஸ்)
31. ட்வைன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்)
32. எவின் லூயிஸ் (வெஸ்ட் இண்டீஸ்)
ரூ.1.5 கோடி அடிப்படை விலையாக கொண்ட வீரர்கள்:
1. ஷிம்ரான் ஹெட்மயர் (வெஸ்ட் இண்டீஸ்)
2. ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்)
3. வாஷிங்டன் சுந்தர் (இந்தியா)
4. ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து)
5. நிகோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்)
6. அமித் மிஷ்ரா (இந்தியா)
7. ஆரோன் ஃபின்ச் (ஆஸ்திரேலியா)
8. டேவிட் மலான் (இங்கிலாந்து)
9. ஒயின் மோர்கன் (இங்கிலாந்து)
10. ஜேம்ஸ் நீஷம் (நியூசிலாந்து)
11. இஷாந்த் சர்மா (இந்தியா)
12. அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து)
13. கிறிஸ் லின் (ஆஸ்திரேலியா)
14. க்ளென் ஃபிலிப்ஸ் (நியூசிலாந்து)
15. ஆடம் மில்னே (நியூசிலாந்து)
16. உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா)
17. லூயிஸ் கிரிகோரி (இங்கிலாந்து)
18. கேன் ரிச்சர்ட்சன் (ஆஸ்திரேலியா)
19. டிம் சௌதி (நியூசிலாந்து)
20. காலின் முன்ரோ (நியூசிலாந்து)
ஐபிஎல் 2022 மெகா ஏலம்: ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எத்தனை வீரர்கள்..?
ஆஸ்திரேலியா - 47
வெஸ்ட் இண்டீஸ் - 34
தென்னாப்பிரிக்கா - 33
இங்கிலாந்து - 24
நியூசிலாந்து - 24
இலங்கை - 23
ஆப்கானிஸ்தான் - 17
வங்கதேசம் - 5
அயர்லாந்து - 5
நமீபியா - 3
ஸ்காட்லாந்து - 2
ஜிம்பாப்வே - 1
நேபாளம் - 1
அமெரிக்கா - 1
ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன் அணிகள் தக்கவைத்த வீரர்கள்:
1. சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி)
தோனி (ரூ.12 கோடி)
மொயின் அலி (ரூ.8 கோடி)
ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.6 கோடி),
2. மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா (ரூ.16 கோடி)
ஜஸ்ப்ரித் பும்ரா (ரூ.12 கோடி)
சூர்யகுமார் யாதவ் (ரூ.8 கோடி)
கைரன் பொல்லார்டு (ரூ.6 கோடி)
3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி (ரூ.15 கோடி)
க்ளென் மேக்ஸ்வெல் (ரூ.11 கோடி)
முகமது சிராஜ் (ரூ.7 கோடி)
4. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
கேன் வில்லியம்சன் (ரூ.14 கோடி)
அப்துல் சமாத் (ரூ.4 கோடி)
உம்ரான் மாலிக் (ரூ.4 கோடி)
5. ராஜஸ்தான் ராயல்ஸ்:
சஞ்சு சாம்சன் (ரூ.14 கோடி)
ஜோஸ் பட்லர் (ரூ.10 கோடி)
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.4 கோடி)
6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஆண்ட்ரே ரசல் (ரூ.12 கோடி)
வருண் சக்கரவர்த்தி (ரூ.8 கோடி)
வெங்கடேஷ் ஐயர் (ரூ.8 கோடி)
சுனில் நரைன் (ரூ.6 கோடி)
7. டெல்லி கேபிடள்ஸ்:
ரிஷப் பண்ட் (ரூ.16 கோடி)
அக்ஸர் படேல் (ரூ.9 கோடி)
பிரித்வி ஷா (ரூ.7.5 கோடி)
அன்ரிக் நோர்க்யா (ரூ.6.5 கோடி)
8. பஞ்சாப் கிங்ஸ்:
மயன்க் அகர்வால் (ரூ.14 கோடி)
அர்ஷ்தீப் சிங் (ரூ.4 கோடி)
9. குஜராத் டைட்டன்ஸ்:
ஹர்திக் பாண்டியா (ரூ.15 கோடி)
ரஷீத் கான் (ரூ.15 கோடி)
ஷுப்மன் கில் (ரூ.8 கோடி)
10. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (ரூ.17 கோடி)
மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ரூ.9.2 கோடி)
ரவி பிஷ்னோய் (ரூ.4 கோடி)