ரன்னே ஓட முடியாத அளவுக்கு பெரிய தொப்பை.. திறமையான பேட்ஸ்மேனை விளாசிய அக்தர்

By karthikeyan VFirst Published Mar 15, 2020, 4:51 PM IST
Highlights

பாகிஸ்தான் வீரர் ஷர்ஜீல் கானை தொப்பையை குறைக்குமாறு அக்தர் மற்றும் ரமீஸ் ராஜா ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். 
 

பாகிஸ்தான் அணியில் 2013ம் ஆண்டு அறிமுகமான ஷர்ஜீல் கான் 2017ம் ஆண்டுவரை அந்த அணியில் சர்வதேச போட்டிகளில் ஆடினார். அதன்பின்னர் பாகிஸ்தான் அணியில் அவர் ஆடவில்லை. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்காக ஆடிய அவர், அதன்பின்னர் ஆடவில்லை. 

இந்நிலையில், தற்போது, பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியில் ஆடிவரும் ஷர்ஜீல் கான் சிறப்பாக ஆடிவருகிறார். பாபர் அசாமுடன் தொடக்க வீரராக இறங்கி கராச்சி அணிக்காக சிறப்பாக ஆடிவருகிறார். லாகூர் அணிக்கு எதிரான போட்டியில் கூட, 151 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது பாபர் அசாமுடன் இணைந்து சிறப்பாக ஆடி விக்கெட்டே விழாமல் இலக்கை எட்ட உதவினார்.

அந்த போட்டியில் ஷர்ஜீல் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். ஷர்ஜீல் கான், 59 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தார். 

அவர் பேட்டிங் நன்றாக ஆடினாலும் கூட, அவரது ஃபிட்னெஸில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, பாகிஸ்தான் முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது. 

ஷர்ஜீல் கான் தொப்பையை குறைக்க வேண்டும் என அக்தர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அக்தர், ஷர்ஜீல் அரைசதம் அடித்திருந்தாலும் கூட, இதுவரை மூன்று முறை அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் திறமையான பேட்ஸ்மேன் தான். ஆனால் அவர் தொப்பையை குறைத்து, ஃபிட்டாக வேண்டும். அவர் மீண்டும் அணியில் இடம்பெறுவதற்கு டைம் இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தி அவர் ஃபிட்னெஸில் கவனம் செலுத்த வேண்டும் என்று அக்தர் வலியுறுத்தியிருக்கிறார். 

Also Read - எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.. மௌனம் கலைத்த ரிதிமான் சஹா

அதேபோல பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜாவும் அதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ரமீஸ் ராஜா, ஷர்ஜீல் கான் அவரது ஃபிட்னெஸில் கவனம் செலுத்தி ஃபிட்னெஸை மேம்படுத்த வேண்டும். அவர் குண்டாகவும் அன்ஃபிட்டாகவும் இருக்கிறார். அவரால் ரன் ஓடவே முடியவில்லை. ரன் ஓட திணறுகிறார். அவரால் ரன் ஓட முடியாததால் பாபர் அசாம் பல நேரங்களில் கடுப்பாகியிருக்கிறார். பவுண்டரியையும் சிக்ஸரையுமே எப்போதும் சார்ந்திருக்க முடியாது. எல்லா நேரங்களிலும் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாது என்ற எதார்த்தத்தை உணர்ந்து ரன் ஓட வேண்டும். அதற்கு ஃபிட்டாக இருக்க வேண்டும். எனவே அவர் ஃபிட்னெஸில் கவனம் செலுத்த வேண்டும் என ரமீஸ் ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
 

click me!