ஃப்ளாட்டான பிட்ச்சில் கூட விக்கெட் வீழ்த்தவல்ல பவுலர்..! செம திறமைசாலி.. இந்திய பவுலருக்கு அகார்கர் புகழாரம்

Published : Aug 23, 2021, 10:17 PM IST
ஃப்ளாட்டான பிட்ச்சில் கூட விக்கெட் வீழ்த்தவல்ல பவுலர்..! செம திறமைசாலி.. இந்திய பவுலருக்கு அகார்கர் புகழாரம்

சுருக்கம்

ஷமி எந்த விதமான பிட்ச்சிலும் விக்கெட் வீழ்த்தவல்ல பவுலர் என்று அஜித் அகார்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.  

இந்திய அணி முன்னெப்போதையும் இப்போதுதான் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, நடராஜன், ஷர்துல் தாகூர் என அனைத்துவிதமான ஃபாஸ்ட் பவுலர்களையும் கொண்ட நல்ல வலுவான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக திகழ்கிறது இந்திய அணி.

முன்னெப்போதையும் விட சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றிருக்கும் நிலையில், இப்போதைய சூழலில் இந்திய அணியின் பவுலிங் யூனிட் தான் உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட் என்று முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் புகழ்ந்துவருகின்றனர்.

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் பவுலிங் ஜாம்பவான் அஜித் அகார்கர், ஃப்ளாட்டான பிட்ச்களில் கூட விக்கெட் வீழ்த்தக்கூடிய பந்துவீசவல்லவர் ஷமி. இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் மிரட்டுகிறார்கள். ஷர்துல் தாகூர் முதல் டெஸ்ட்டில் நன்றாக வீசினார். 2வது டெஸ்ட்டில் ஆடவில்லை. இஷாந்த் சர்மா 2வது டெஸ்ட்டில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி நல்ல வெரைட்டியான பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது  என்று அகார்கர் புகழாரம் சூட்டினார்.
 

PREV
click me!

Recommended Stories

எல்லை மீறிய ரசிகர்.. பொறுமை இழந்த பும்ரா.. கடும் கோபத்தில் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்!
4வது டி20 ரத்து: மேட்ச் தான் நடக்கலயே.. டிக்கெட் பணத்தை திருப்பி கொங்க.. ரசிகர்கள் ஆதங்கம்