
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் ஆடவில்லை. அந்த போட்டியில் அஷ்வின் ஆடாததே கடும் விமர்சனத்துக்குள்ளானது. எந்த கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய சீனியர் ஸ்பின்னரான அஷ்வினை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய அணி தேர்வையும் விமர்சித்தனர்.
எனவே 2வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது டெஸ்ட்டிலும் அஷ்வின் ஆடவில்லை. மறுபடியும் 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியது இந்திய அணி.
கண்டிஷனை கருத்தில் கொண்டுதான் 2வது டெஸ்ட்டில் அஷ்வினை எடுக்காமல் 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியதாக கேப்டன் விராட் கோலி விளக்கமளித்திருந்தார். அதுகுறித்து அஷ்வினும் தெளிவுபடுத்தினார். லண்டன் லார்ட்ஸில் 2வது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் தான், தான் ஆடவில்லை என்றும், கண்டிஷனை கருத்தில்கொண்டு 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் இந்திய அணி ஆட வேண்டியிருந்ததால், தான் ஆடவில்லை என்றும் அஷ்வின் தெரிவித்திருந்தார்.
கண்டிஷனை கருத்தில்கொண்டு இந்திய அணி கடந்த போட்டியில் அஷ்வினை எடுக்கவில்லை என்றாலும், அடுத்த போட்டியில் அவரை ஆடவைக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், அஷ்வின் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர், ஹெடிங்லி பிட்ச்சில் பவுலர்கள் மற்ற இங்கிலாந்து பிட்ச்களை விட கொஞ்சம் ஷார்ட்டாக வீசவேண்டும். ஹெடிங்லியில் இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் ஆடும். இந்திய அணியின் பவுலிங் அட்டாக் வலுவாக இருக்கிறது. முகமது ஷமிக்கு ஓய்வு தேவை. அஷ்வின் அடுத்த போட்டியில் ஆட வாய்ப்பிருக்கிறது என்று மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.