#ENGvsIND இங்கிலாந்தின் மற்றுமொரு வீரர் காயத்தால் விலகல்..! இங்கி., அணிக்கு பெரும் பின்னடைவு

Published : Aug 23, 2021, 04:58 PM IST
#ENGvsIND இங்கிலாந்தின் மற்றுமொரு வீரர் காயத்தால் விலகல்..! இங்கி., அணிக்கு பெரும் பின்னடைவு

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் காயம் காரணமாக விலகியுள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ளன. முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3வது டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி ஹெடிங்லியில் தொடங்குகிறது. 3வது போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் அந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட். 

ஏற்கனவே இந்த தொடரில் ஃபாஸ்ட் பவுலர் ஆர்ச்சர் காயம் காரணமாக ஆடவில்லை. பென் ஸ்டோக்ஸும் ஆடவில்லை. முதல் போட்டியில் ஆடியதுடன், காயத்தால் இந்த தொடரிலிருந்தே விலகினார் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட். இந்நிலையில், 2வது டெஸ்ட்டில் பிராடுக்கு பதிலாக ஆடி நன்றாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்க் உட்டுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர் 3வது டெஸ்ட்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

2வது டெஸ்ட்டில் மார்க் உட் அபாரமாக ஆடினார். அவர் 3வது டெஸ்ட்டில் ஆடாதது இங்கிலாந்து அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும்.

PREV
click me!

Recommended Stories

சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!