விக்கெட்டே விழ கூடாது; ஆஸ்திரேலிய பவுலர்களை வெறுப்பேத்த வேண்டும் - அஜித் அகர்கர் அறிவுரை!

By Rsiva kumar  |  First Published Mar 11, 2023, 10:02 AM IST

ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி விளையாடினார்களோ அதே போன்று நிலைத்து நின்று விக்கெட்டே இழக்காமல் அவர்களை வெறுபேத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய அணியின் பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்துள்ளது. இதில், உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். முதல் நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா 2ஆவது நாளில் 6 விக்கெட்டிற்கு 225 ரன்கள் குவித்துள்ளது.

கவாஜா மீது பந்தை எறிந்த கேஎஸ் பரத்: டேய் சும்மா இருடா என்று திட்டிய விராட் கோலி!

Tap to resize

Latest Videos

கவாஜா மற்றும் க்ரீன் இருவரும் மட்டும் நிலையாக நின்று இந்திய பவுலர்களை திணற வைத்தனர். அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல், உமேஷ் யாதவ், முகமது ஷமி என்று ஒவ்வொருவரையும் அழ வைக்காத குறையாக நிலைத்து நின்று ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி மட்டும் 208 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஜோடியை பிரிக்க படாதபாடு பட்ட இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பக்க பலமாக இருந்தார். அவர் கேமரூன் க்ரீன் விக்கெட்டை எடுத்து கொடுத்ததன் மூலமாக ஆஸ்திரேலிய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது.

ரோகித் சர்மா சாதனையை முறியடித்து நம்பர் 1 இடம் பிடித்த உஸ்மான் கவாஜா!

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. இதில், ரோகித் சர்மா 17 ரன்களுடனும், சுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில், முன்னாள் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கவாஜா எப்படி மெதுவாக விளையாட் இந்திய பவுலர்களை வெறுப்பேத்தினாரோ, அதே போன்று இந்திய பேட்ஸ்மேன்களும் விளையாடி வெறுப்பேற்ற வேண்டும். விக்கெட்டுகளையும் விட்டுக் கொடுக்க கூடாது. நீங்கள் கவனமாக விளையாடும் வரையில் விக்கெட்டுகள் விழாது.

முதல் முறையாக இந்தியாவுக்கு டூர் வந்த கேமரூன் க்ரீன் - பவுண்டரியுடன் முதல் சதமடித்து சாதனை!

கவனக்குறைவாக விளையாடினால் மட்டுமே விக்கெட்டுகளை இழக்க நேரிடும். இன்றைய போட்டியில் இந்திய வீரர்களுக்கு நேதன் லயன் மட்டும் கொஞ்சம் நெருக்கடி கொடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனினும், மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாகத்தான் இருக்கிறது என்பதை ஆஸ்திரேலிய பேட்டிங்கை வைத்து சொல்ல முடியும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்கள் பொறுமையாக விளையாடி 600 ரன்களுக்கு மேல் அடித்து ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய வைத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினால், இந்திய அணி வெற்றி பெறும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு யாரையும் எதிர்பார்க்காமல் இந்திய அணியால் செல்ல முடியும்.

208 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பிரித்த அஸ்வின் - விழவே வேணானுன்ன இருந்த விக்கெட், ஒன்னுக்கு ஒன்னு ப்ரீ!

click me!