ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய வீரர்கள் கை, தலை, முழங்கை ஆகிய பகுதிகளில் அடி வாங்கி காயம் பட்டு விளையாடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் இந்தியா டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 327 ரன்கள் குவித்தது. பின்னர் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 429 ரன்கள் குவித்தது.
இப்படி இருந்தால் எப்படி தான் விளையாடுவது? – மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!
பின்னர், ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சரி, அவர் தான் ஆட்டமிழந்துவிட்டார், சுப்மன் கில் இருக்கிறார் என்று சந்தோஷப்பட்ட நிலையில், அவரும் 13 ரன்களில் கிளீன் போல்டானார். ஒருகட்டத்தில் 30 ரன்களில் இந்தியா 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதுமட்டுமின்றி 6.4 ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஃபாலோ ஆன் தவிர்க்குமா இந்தியா? இன்னும் 118 ரன்கள் தேவை!
அதன் பிறகு சட்டேஷ்வர் புஜரா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்தனர். ஆனால், புஜாரா 14 ரன்களாக இருந்த போது கில் ஆட்டமிழந்ததைப் போன்று ஒரே மாதிரியாகவே ஆட்டமிழந்துள்ளார். விராட் கோலியும் 14 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அஜிங்கியா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தனர். எனினும், ரவீந்திர ஜடேஜா எளிதான பந்தில் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் 14 பந்துகள் பிடிப்பதற்குள்ளாக மார்பு, முழங்கைப் பகுதியில் காயம் ஏற்பட்டார். இதே போன்று அஜிங்கியா ரஹானேவிற்கு கையில் காயம் ஏற்பட்டு பேண்டேஜ் போடப்பட்டது. அடுத்து தலையிலும் காயம் ஏற்பட்டது. இப்படி அடிமேல் அடி வாங்கி இந்திய வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2 நாட்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. பாலோ ஆன் தவிர்க்க இந்தியா இன்னும் 118 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே மாதிரியாக ஆட்டமிழந்த கில், புஜாரா: வைரலாகும் கார்பன் காபி புகைப்படம்!
இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்திருந்தார். ஆஸி, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து மைதானம் ஆஸிக்கு சாதமாக இருப்பதால், கண்டிப்பாக ஆஸி அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த மைதானம் குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருப்பதாவது: இந்திய வீரர்கள் பயிற்சி செய்வதற்கு நல்லவொரு பிட்ச் தான் வழங்குவார்கள்.
என்ன சோனமுத்தா போச்சா: டுவிட்டரில் தாறுமாறாக வைரலாகும் ”ஜோக்கர்” ரோகித் சர்மா மீம்ஸ்!
ஆனால், இந்த முறை தற்போது வழங்கப்பட்டுள்ள மைதானம் கொஞ்சம் மோசமானதாக உள்ளது. பந்து பவுன்சராக வருகிறது. இதன் காரணமாக அணி வீரர்கள் காயம் அடைந்து வருகின்றனர். மேலும், இறுதிப் போட்டிக்காக வழங்கப்பட்டுள்ள மைதானம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமற்றதாக கூட இருக்கலாம் என்று அஸ்வின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சொன்னது உண்மையாகியுள்ளது.
Media credits : Star Sports pic.twitter.com/lDqps660Ns
— rajendra tikyani (@Rspt1503)
Ajinkya Rahane playing with his injured finger .
Where we have players like Virat Kohli and shameless Shubman Gill👍 pic.twitter.com/YrmjpQZ5EQ