அந்த பையன் என்ன தப்பு பண்ணான்.. அவன் பாவம்..! அவனை ஏன் டீம்ல எடுக்கல..? தேர்வாளர்களை தெறிக்கவிட்ட அஜய் ஜடேஜா

Published : Nov 23, 2021, 02:11 PM IST
அந்த பையன் என்ன தப்பு பண்ணான்.. அவன் பாவம்..! அவனை ஏன் டீம்ல எடுக்கல..? தேர்வாளர்களை தெறிக்கவிட்ட அஜய் ஜடேஜா

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரி எடுக்கப்படாததையடுத்து தேர்வாளர்களை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் அஜய் ஜடேஜா.

நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிராத ஷ்ரேயாஸ் ஐயருக்கு இது அருமையான வாய்ப்பு. சூர்யகுமார் யாதவும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே சவாலான இங்கிலாந்து கண்டிஷனில் அருமையாக பேட்டிங் ஆடி, பின்னர் 2 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களிலும் நன்றாக பேட்டிங் ஆடி, கடந்த 3 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்து வந்த ஹனுமா விஹாரிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது, காயத்துடன் களமிறங்கி 162 பந்துகள் பேட்டிங் ஆடி அந்த போட்டியை இந்திய அணி டிரா செய்ய உதவினார். சிட்னி டெஸ்ட் டிரா ஆனதால்தான் இந்திய அணியால் அந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்க முடிந்தது. இந்திய அணி 2வது முறையாக ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக விஹாரியும் திகழ்ந்தார்.

அந்த தொடருக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விஹாரி ஆடவில்லை. இங்கிலாந்து இந்தியாவிற்கு வந்து ஆடிய டெஸ்ட் தொடர், இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஆகிய தொடர்களில் விஹாரி ஆடவில்லை. கடைசியாக ஆடிய போட்டி வரை அருமையாக ஆடிய ஹனுமா விஹாரி, அப்படியே ஓரங்கட்டப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழ, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஹனுமா விஹாரி புறக்கணிப்பை கடுமையாக விமர்சித்து தள்ளினர்.

அடுத்த சில மணிநேரங்களில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த இந்தியா ஏ அணியில் விஹாரி பெயர் இடம்பெறவில்லை. இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட பிறகு எழுந்த விமர்சனங்களை அடுத்து, அவரது பெயர் இந்தியா ஏ அணியில் இடம்பெற்றது.

இந்நிலையில், ஹனுமா விஹாரி இந்திய டெஸ்ட் அணியில் எடுக்கப்படாததை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் அஜய் ஜடேஜா.

இதுகுறித்து கிரிக்பஸ் இணையதளத்தில் பேசிய அஜய் ஜடேஜா, விஹாரி பாவம். அவர் அருமையாக ஆடியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் அங்கம் வகித்திருக்கிறார். அவர் என்ன தவறு செய்தார்? அவரை இந்தியாவில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடவைக்காமல், இந்தியா ஏ அணியில் ஏன் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியாவிற்காக ஆடிவந்த வீரருக்கு அணியில் இடம் இல்லை. அவருக்கு பதிலாக புதிதாக ஒரு வீரர் அணியில் இணைகிறார். விஹாரி இந்தியா ஏ அணியில் எடுக்கப்படுகிறார் என்று தேர்வாளர்களை மிகக்கடுமையாக விமர்சித்தார் அஜய் ஜடேஜா.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..