இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு முன்பாக இலங்கை அணியில் அடுத்தடுத்து உறுதியாகும் கொரோனா..!

Published : Jul 09, 2021, 05:58 PM IST
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு முன்பாக இலங்கை அணியில் அடுத்தடுத்து உறுதியாகும் கொரோனா..!

சுருக்கம்

இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவரை தொடர்ந்து அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  

ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. வரும் 13ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது.

இந்நிலையில், இலங்கை அணியில் அடுத்தடுத்து 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியது. அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக ஆடவுள்ளது.

இன்னும் 4 நாட்களில் இந்த தொடர் தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியில் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர்(Data Analyst) ஜி.டி.நிரோஷனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!