சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடைசி 8 ஓவர்களில் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை.
ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது.
except dube...others Innings today pic.twitter.com/Y3WmxGGx83
— black cat (@Cat__offi)
இதே போன்று அடுத்த 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ரச்சின் ரவீந்திரா 12 ரன்களில் வெளியேற, ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் இதுவரையில் 15, 46, 1 என்று வரிசையாக சொற்ப ரன்களில ஆட்டமிழந்துள்ளார். அதன் பிறகு வந்த ரஹானே அதிரடியாக தொடங்கினாலும், சிங்கிளாக எடுக்க ஆரம்பித்தார். அவர் 30 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சிக்ஸர் மன்னனான ஷிவம் துபே வந்து 4 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து 45 ரன்கள் சேர்த்து கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் டேரில் மிட்செல் ஒவ்வொரு ரன்னாக எடுத்தனர். மேலும், இருவரும் இணைந்து 5 பவுண்டரி மட்டுமே அடித்துள்ளனர். மிட்செல் 13 ரன்களில் ஆட்டமிழக்க கடைசியில் வந்த தோனி 2 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். ரவீந்திர ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி விரட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி 8 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Abhishek sharma what a knock 🙌 pic.twitter.com/AeAnRJJzsp
— Sujan Reddy (@sujan_reddy12)
இதில், ஜடேஜா 23 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் புவனேஷ்வர் குமார், நடராஜன், பேட் கம்மின்ஸ், ஷாபாஸ் அகமது, ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
'6' Sami reporting to duty 🔥 pic.twitter.com/Ie60ESZfYG
— Harish N S (@Harish_NS149)