ஒரு சிக்ஸ் அடிச்சா 100 சிக்ஸ் அடித்த மாதிரி – ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர் அடித்து சாதனை படைத்த ஜடேஜா!

By Rsiva kumarFirst Published Mar 23, 2024, 10:58 AM IST
Highlights

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்ஸ் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 100 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது. பின்னர், பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் 15, ரச்சின் ரவீந்திரா 37, அஜின்க்யா ரஹானே 27, டேரில் மிட்செல் 22 என்று ரன்கள் சேர்த்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசியாக ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், ஷிவம் துபே 34* ரன்களும், ரவீந்திர ஜடேஜா 25* ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்ஸ் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 100 சிக்ஸ் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதுவரையில் ரவீந்திர ஜடேஜா 227 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 2717 ரன்களும், 2 அரைசதமும், 193 பவுண்டரியும், 100 சிக்ஸரும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 62* ரன்கள் எடுத்துள்ளார். இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக அவதாரம் எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் தோற்ற போதிலும் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

மேலும், கடந்த 16 ஆண்டுகள் சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கடைசியாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்பிசி வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து கிட்டத்தட்ட 5784 நாட்கள் முடிந்துவிட்டது. மேலும், இதுவரையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய 32 போட்டிகளில் சிஎஸ்கே 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி 10 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 7ஆவது போட்டி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

 

click me!