பிக்‌ஷர் ஆஃப் தி டே: சிஎஸ்கே சாம்பியனுக்குப் பிறகு குடும்பத்தோடு போட்டோ எடுத்த தோனி!

By Rsiva kumar  |  First Published May 31, 2023, 10:16 AM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக சாம்பியனானதைத் தொடர்ந்து தோனி, தனது மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவா உடன் ஒன்றாக எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி கடந்த 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது.

அடடே, சாக்‌ஷி தோனி மற்றும் அனுஷ்கா சர்மா ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸா?

Tap to resize

Latest Videos

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மழை குறுக்கீடு காரணமாக 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில், கடைசி பந்தில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடித்துக் கொடுத்ததன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியன் டைட்டில் வென்றது.

துணியால் மறைத்து கொண்டு வரப்பட்ட ஐபிஎல் டிராபி: தி.நகர் திருப்பதி ஏழுவெங்கடாஜலபதி கோயிலில் வைத்து பூஜை!

இந்த சீசனுடன் ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு மற்றும் சிஎஸ்கே டிராபி வெல்ல காரணமாக இருந்த ஜடேஜா இருவரும் தான் டிராபியை தங்களது கையில் பெற்றனர். இதையடுத்து, டிராபியுடன் குரூப் போட்டோ எடுக்கும் போது தோனி தனியாக சென்று நின்றுள்ளார்.

கேட்சே பிடிக்க மாட்ரான், ஆட்டோகிராஃப் வங்க மொத ஆளா வந்துர்றான் – தீபக் சாஹர் அண்ட் தோனி சமரசம்!

இந்த நிலையில், தோனி, தனது மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவா உடன் இணைந்து ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

click me!