ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலகக் கோப்பை 5 ஆவது லீக் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 5ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து பேட்டிங்கும் ஆடியது. இதில், மிட்செல் மார்ஷ் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 41 ரன்களில் வெளியேறினார். எனினும், அவர் 19 இன்னிங்ஸில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதே போன்று ஸ்டீவ் ஸ்மித்தும் 46 ரன்களில் வெளியேற, மார்னஷ் லபுனேஷ் 27 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
India vs Australia: உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்த வார்னர்!
பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் 4ஆவது பந்தில் இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 2ஆவது ஓவரை ஜோஸ் ஹசல்வுட் வீசினார். அந்த ஓவரின் 3ஆவது பந்தில் ரோகித் சர்மா எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 40 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.
India vs Australia: ஆஸிக்கு ஆப்பு வச்ச ஜடேஜா; தட்டு தடுமாறி 199 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா!
இதற்கு முன்னதாக கடந்த 1983 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். அதில் சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இருவரும் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளனர். எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
India vs Australia: உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்த வார்னர்!
Indian opening pair to be dismissed for ducks in the World Cup match:
- 1983.
- 2023. pic.twitter.com/5C2bmNzJAr