12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பவுலர்கள் 2ஆவது முறையாக 2 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான உலகக் கோப்பையின் 12 ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் 20 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார்.
சிராஜ், பும்ரா, ஹர்திக், குல்தீப், ஜடேஜாவிடம் சிக்கி சின்னா பின்னமான பாகிஸ்தான் – 191க்கு ஆல் அவுட்!
மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக்கை, ஹர்திக் பாண்டியா மந்திரம் போட்டி காலி செய்தார். முதல் பந்தில் பவுண்டரி அடிக்க, அடுத்த பந்தில் மந்திரம் போட்டு இமாம் உல் ஹக்கை 36 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் களமிறங்கினார். பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
குல்தீப் யாதவ் வீசிய 24.3 ஆவது ஓவரில், பாபர் அசாமிற்கு எல்பி டபிள்யூ அப்பீல் செய்ய நடுவர் கொடுக்கவில்லை. ஆனால், டிவி ரீப்ளேயில் அவுட் தெளிவாக தெரியவே, நடுவர் முடிவு என்று அறிவிக்கப்பட்டது. அப்போது பாபர் அசாம் 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பிறகு தொடர்ந்து விளையாடிய அவர் 50 ரன்களில் முகமது சிராஜ் ஸ்லோயர் பந்தில் ஆட்டமிழந்தார்.
IND vs PAK, Hardik Pandya Manthiram: மந்திரம் போட்ட ஹர்திக் பாண்டியா – கிடைத்த பரிசு என்ன தெரியுமா?
அதே ஓவரில் களமிறங்கிய சவுத் சகீல் ரன் அவுட்டிலிருந்தும் தப்பித்தார். எனினும், அவர் 6 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது களமிறங்கினார். அவர் வந்த வேகத்தில் இறங்கி பவுண்டரி அடித்தார். ஆனால், கடைசி பந்தில் ஸ்வீப் அடிக்க முயற்சித்து 4 ரன்களில் கிளீன் போல்டானார். அப்போது பாகிஸ்தான் 33 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.
ஒருபுறம் பொறுமையாக விளையாடி வந்த முகமது ரிஸ்வான் 49 ரன்களில் ஜஸ்ப்ரித் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஷதாப் கான் 2 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த முகமது நவாஸ் 4 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அடுத்து ஜடேஜா ஓவரில், ஹசன் அலி 12 ரன்களில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக ஹரிஷ் ராஃப்பும் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 42.5 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் அதன் பிறகு சிராஜ், பும்ரா, குல்தீப், ஹர்திக் மற்றும் ஜடேஜா ஆகியோரது பவுலிங்கிற்கு ஈடு கொடுக்க முடியாமல் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி 36 ரன்களுக்கு பாகிஸ்தான் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதன் மூலமாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஒவ்வொருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பவுலர்கள் ஒவ்வொருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்தப் போட்டி மொஹாலியில் நடந்தது. இதில், ஜாகீர் கான், ஆசிஷ் நெஹ்ரா, முனாப் படேல், ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதில் 5 பவுலர்கள் தான் பந்து வீசினார்கள்.
கடந்த 2011 ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதின. இதில், முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ரசிகையை ஆரத் தழுவிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு 99 கசையடிகள் தண்டனையா?
இதில், 2 விக்கெட்டுகள் எல்பிடபிள்யூ ரெவியூ எடுக்க இந்திய அணிக்கு கிடைத்தது. இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். தற்போது வரையில் 3 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 Indian Bowlers Picking atleast 2 Wickets in a Worldcup match
vs Pakistan in 2011
(Zaheer, Nehra, Munaf, Harbhajan, Yuvraj)
vs Pakistan in 2023
(Siraj, Bumrah, Hardik, Kuldeep, Jadeja)*