இலங்கைக்கு எதிரான 30ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி பவுலிங் செய்வதாக அறிவித்தார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான 30ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இந்தப் போட்டியில் நூர் அகமதுவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஃபஷல்ஹக் ஃபரூக்கி அணியில் இடம் பெற்றுள்ளார். ரஷீத் கான் இன்று தனது 100ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறார்.
தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா – அரையிறுதியில் களமிறக்க பிசிசிஐ முடிவு?
இதே போன்று இலங்கை அணியில் குசால் பெரேரா அணியில் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக திமுத் கருணாரத்னே அணியில் பெற்றுள்ளார். மேலும், துஷ்மந்தா சமீரா அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன், ஹஷ்மதுல்லா ஷாகிடி (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி.
இலங்கை:
பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனன்ஜெயா டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜீதா, துஷ்மந்தா சமீரா, தில்ஷன் மதுஷங்கா
இரு அணிகளும் இதுவரையில் 11 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில் இலங்கை 7 போட்டியிலும், ஆப்கானிஸ்தான் 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இந்த உலகக் கோப்பையில் இலங்கை அணி விளையாடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று ஆப்கானிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 7ஆவது இடத்தில் உள்ளது.