இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலமாக 59ஆவது போட்டியில் வெற்றி பெற்று அதிக வெற்றிகளில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 29ஆவது லீக் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 229 ரன்கள் குவித்தது. இதில், ரோகித் சர்மா 87 ரன்களும், சுர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் லியாம் லிவிங்ஸ்டன் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 0, பென் ஸ்டோக்ஸ் 0 என்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். இறுதியாக இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் நடப்பு சாம்பியன் – 3ஆவது முறையாக 200 ரன்களுக்குள் ஆல் அவுட்!
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி உலகக் கோப்பையில் 59ஆவது வெற்றியை பெற்றுள்ளது. நியூசிலாந்து 58 வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 73 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த தொடரில் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி இதுவரையில் சேஸிங்கில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது முதலில் பேட்டிங் செய்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.