வாழ்வா சாவா போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள்!அஷ்வினுக்கு அணியில் இடம்! ஆஃப்கான் அணியின் சர்ப்ரைஸ் முடிவு

By karthikeyan VFirst Published Nov 3, 2021, 7:21 PM IST
Highlights

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 1-ல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது.

க்ரூப் 2-ல் ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்குமே வாய்ப்புள்ளது. முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் படுதோல்வி அடைந்த இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வெற்றி வேட்கையில் இறங்குகிறது.

இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் வலுவாக உள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, தன்னம்பிக்கையுடன் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் ஃபைனலில் எந்தெந்த அணிகள் மோதும்..? ஷேன் வார்ன் போட்ட ரூட் மேப்

அபுதாபியில் நடக்கும் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை ஆடிய போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவந்த ஆஃப்கானிஸ்தான் அணி, இந்த தொடரில் முதல்முறையாக இந்தியாவுக்கு எதிராக ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சூர்யகுமார் யாதவ் முழு ஃபிட்னெஸ் அடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியதால், அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - ஐபிஎல் 2022: ஐபிஎல் அணிகளுக்கு செம குட் நியூஸ்..! மெகா ஏலத்துக்கு முன் பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அஷ்வினை அணியில் சேர்க்காதது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்த நிலையில், ஒருவழியாக அஷ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், முகமது ஷேஷாத் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி (கேப்டன்), குல்பாதின் நைப், ஷராஃபுதின் அஷ்ரஃப், ரஷீத் கான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், ஹமீத் ஹசன்.

இதையும் படிங்க - எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 இந்திய வீரர்கள்..! தல தோனி தான் கேப்டன்

click me!