தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 42ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 244 ரன்கள் மட்டுமே எடுத்து அரையிறுதி வாய்ப்பை உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பையின் 42ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 438 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை ஓவர்டேக் செய்யும். இதன் மூலமாக அரையிறுதி வாய்ப்பு பெறும்.
ஆனால், தற்போது நடந்து வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்மதுல்லா உமர்சாய் மட்டுமே நிலையாக நின்று 97* ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஓரளவு கை கொடுக்கவே ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மேலும், உலகக் கோப்பை தொடரிலிருந்து 5ஆவது அணியாக வெளியேறியது.
பும்ராவை ஓரங்கட்டி ரச்சின் ரவீந்திராவுக்கு சிறந்த வீரருக்கான விருது வழங்கிய ஐசிசி!
ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு விளையாடிய 9 போட்டியிலும் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. அதோடு, முதல் அணியாக உலகக் கோப்பை வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. ஆனால், 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இதுவரையில் (தென் ஆப்பிரிக்கா போட்டிக்கு முன்னதாக) விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் – சவுரவ் கங்குலி உறுதி!
அரையிறுதி வாய்ப்பு கிடைத்தும் அதனை நழுவவிட்டு கடைசி வாய்ப்பையும் இழந்து பரிதாபமாக உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது. ஆனாலும், இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தும் ஒரு கேட்சால் நழுவவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடக்க இருக்கும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை சேஸ் செய்தால், 50 ரன்கள் என்றால் 2 ஓவரிலும், 100 ரன்கள் என்றால் 3 ஓவரிலும் அடித்து வெற்றி பெற வேண்டும்.
South Africa vs Afghanistan: அரையிறுதிக்கான கடைசி வாய்ப்பு: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்!
Afghanistan should be proud of their performance in this World Cup.
Unfortunately they couldn't make the Semis, but they defeated teams like England, Pakistan, Sri Lanka and almost got over the line against Australia. A young team put on a show on the Indian soil. pic.twitter.com/RO4Cahcmlu