Afghanistan vs South Africa: 3 ரன்களில் சதத்தை கோட்டைவிட்ட உமர்சாய் – ஆப்கானிஸ்தான் 244 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Nov 10, 2023, 6:22 PM IST

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 42ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.


ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 42 ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அதன்படி ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், குர்பாஸ் 25 ரன்னிலும், ஜத்ரன் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பும்ராவை ஓரங்கட்டி ரச்சின் ரவீந்திராவுக்கு சிறந்த வீரருக்கான விருது வழங்கிய ஐசிசி!

Tap to resize

Latest Videos

அதன் பிறகு வந்த ரஹ்மத் ஷா 26 ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 2 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் இக்ராம் அலிகில் 12, முகமது நபி 2, ரஷீத் கான் 14, நூர் அகமது 26, முஜீப் உர் ரஹ்மான் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடிய அஸ்மதுல்லா உமர்சாய் 107 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 97 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜத்ரன் சதம் அடித்துள்ளார். 2ஆவது வீரராக சதம் அடிக்கும் வாய்ப்பை தான் 3 ரன்களில் உமர்சாய் கோட்டைவிட்டுள்ளார்.

2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் – சவுரவ் கங்குலி உறுதி!

இறுதியாக ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் குவித்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் தென் ஆப்பிரிக்கா அணியில் கெரால்டு கோட்ஸி 4 விக்கெட்டுகளும், லுங்கி நிகிடி, கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் குறைவான ரன்கள் எடுத்ததன் மூலமாக ரன் ரேட் அடிப்படையில் பின் தங்கிய நிலையில், அரையிறுதி வாய்ப்பை இழந்து ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் உமர்சாய் மொத்தமாக 353 ரன்கள் குவித்துள்ளார்.

South Africa vs Afghanistan: அரையிறுதிக்கான கடைசி வாய்ப்பு: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்!

click me!