டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ரஷீத் கான்.. இனிமேல் இதை முறியடிக்க முடியுமாங்குறது சந்தேகம்

Published : Sep 05, 2019, 11:48 AM ISTUpdated : Sep 05, 2019, 11:49 AM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ரஷீத் கான்.. இனிமேல் இதை முறியடிக்க முடியுமாங்குறது சந்தேகம்

சுருக்கம்

உலக கோப்பையில் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு ஆஃப்கானிஸ்தான் அணி ஆடவில்லை. உலக கோப்பையை தோல்வி எதிரொலியாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நீக்கப்பட்டு மூன்று விதமான அணிகளுக்கும் இளம் வீரர் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.   

உலக கோப்பையில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. 

உலக கோப்பையில் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு ஆஃப்கானிஸ்தான் அணி ஆடவில்லை. உலக கோப்பையை தோல்வி எதிரொலியாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நீக்கப்பட்டு மூன்று விதமான அணிகளுக்கும் இளம் வீரர் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று விதமான அணிகளுக்குமே ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு புதிய ரத்தம் பாய்ச்சி உத்வேகப்படுத்தும் விதமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, ஆஃப்கானிஸ்தான் அணி முதன்முறையாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடிவருகிறது. 

இன்று தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் தனது கேப்டன்சி பயணத்தை தொடங்கியுள்ள ரஷீத் கான், டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டின் இளம் கேப்டன் என்ற பெருமைக்கு ரஷீத் கான் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். 20 வயது முடிந்து 350 நாட்களில் ரஷீத் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கேப்டன்சியை பயணத்தை தொடங்கியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அணியின் இளம் கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் தைபு, 20 வயது முடிந்து 358 நாட்களில், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது அந்த பெருமையை ரஷீத் கான் பெற்றுள்ளார். 

எதிர்காலத்தில் ரஷீத் கானின் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். இவ்வளவு இளம் வயதில் ஒருவர் கேப்டனாவது அரிதினும் அரிதான சம்பவம்.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!