கில்கிறிஸ்ட்டின் நியாயமான கருத்துக்கு மண்டையா பதிலடி கொடுத்துட்டு ஓடி ஒளிந்த ஹர்பஜன் சிங்

By karthikeyan VFirst Published Sep 5, 2019, 11:05 AM IST
Highlights

ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் வீடியோவை ஒருவர் டுவீட் செய்திருந்தார். அதைக்கண்ட கில்கிறிஸ்ட், அப்போதெல்லாம் டி.ஆர்.எஸ் கிடையாது என்று பதிவிட்டிருந்தார். கில்கிறிஸ்ட் அப்படி பதிவிட்டதற்கு காரணம், ஹர்பஜனின் ஹாட்ரிக்கில் இரண்டாவது விக்கெட்டாக அவுட்டான கில்கிறிஸ்ட் உண்மையாகவே அவுட்டில்லை. அது தவறுதலாக கொடுக்கப்பட்ட அவுட். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து ஹர்பஜன் சிங் மற்றும் இர்ஃபான் பதானுக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். 

பும்ரா ஹாட்ரிக் வீழ்த்தியதை அடுத்து, ஹர்பஜன் மற்றும் இர்ஃபான் பதானின் ஹாட்ரிக் விக்கெட்டுகளும் நினைவுபடுத்தப்பட்டு புகழப்பட்டன. 2001ல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் பாண்டிங், கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின்னர் 2006ல் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் சல்மான் பட், யூனிஸ் கான், முகமது யூசுஃப் ஆகிய மூவரையும் அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட் போட்டார் இர்ஃபான் பதான். 

இந்நிலையில், ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் வீடியோவை ஒருவர் டுவீட் செய்திருந்தார். அதைக்கண்ட கில்கிறிஸ்ட், அப்போதெல்லாம் டி.ஆர்.எஸ் கிடையாது என்று பதிவிட்டிருந்தார். கில்கிறிஸ்ட் அப்படி பதிவிட்டதற்கு காரணம், ஹர்பஜனின் ஹாட்ரிக்கில் இரண்டாவது விக்கெட்டாக அவுட்டானவர் கில்கிறிஸ்ட். ஆனால் அது அவுட்டில்லை. கில்கிறிஸ்ட்டின் பேட்டில் பட்டபின்னர் தான் கால்காப்பில் பட்டது. ஆனால் அம்பயர் தவறுதலாக அவுட் கொடுத்துவிடுவார். ஆனாலும் அம்பயரின் முடிவை எதிர்க்காமல் கில்கிறிஸ்ட் அதிருப்தியுடன் சென்றுவிடுவார். அவுட் இல்லாததற்கு அவுட் கொடுத்ததால்தான் கில்கிறிஸ்ட், அப்போதெல்லாம் ரிவியூ கிடையாது என்று டுவீட் செய்திருந்தார். 

No DRS 😩 https://t.co/3XsCqk9ZiR

— Adam Gilchrist (@gilly381)

கில்கிறிஸ்ட், அப்போதெல்லாம் ரிவியூ கிடையாது என்று மட்டுமே சொன்னாரே தவிர, மற்றபடி தவறாக எதையும் சொல்லவில்லை. உண்மையாகவே அது ஹாட்ரிக் கிடையாது என்பதை பறைசாற்றும் விதமாக, அந்த கருத்தை கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் வெளிப்படையாக சொல்லியிருந்தாலும் அதில் தவறில்லை. ஏனெனில் அது அவுட் இல்லை என்பதுதான் உண்மை. 

அப்படியிருக்க, கில்கிறிஸ்ட்டின் கருத்துக்கு படுமோசமாக பதிலடி கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். ஒருவேளை நீங்கள்(கில்கிறிஸ்ட்) முதல் பந்தில் அவுட்டாகவில்லை என்றாலும் நீண்டநேரம் நிலைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா..? இதுபோன்ற விஷயங்களுக்கெல்லாம் அழுகாதீர்கள். உங்களது ஓய்வுக்கு பின்னராவது அர்த்தத்துடனும் புரிதலுடனும் பேசுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் சில விஷயங்களை மாற்றவே முடியாது என்பதற்கு நீங்கள் தான் உதாரணம். எப்போதுமே அழுகிறீர்களே என்று தரக்குறைவாக கில்கிறிஸ்ட்டை விமர்சிக்கும் விதமாக ஹர்பஜன் சிங் டுவீட் செய்திருந்தார். பின்னர் அந்த டுவீட்டை நீக்கிவிட்டார்.

click me!