#AFGvsZIM 2வது டி20யிலும் ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது

By karthikeyan VFirst Published Mar 19, 2021, 7:21 PM IST
Highlights

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான் அணி.
 

ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வேவுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடந்துவருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்தது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடந்தது.

டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கனி மற்றும் கரீம் ஜனத் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடிய 2வது விக்கெட்டுக்கு 102 ரன்களை குவித்தனர்.

உஸ்மான் கனி 49 ரன்னிலும் அரைசதம் அடித்த கரீம் 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பின்வரிசையில் இறங்கிய முகமது நபி 15 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 40 ரன்களை விளாச, 20 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 193 ரன்களை குவித்தது.

194 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணியில் யாருமே சரியாக ஆடாமல் ஆஃப்கானிஸ்தான் பவுலிங்கில் வீழ்ந்ததால் 17.1 ஓவரில் 148 ரன்னில் சுருண்டதையடுத்து, 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான் அணி. ரஷீத் கான் ஆஃப்கான் அணி சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

click me!