BBL: கடின இலக்கை வெறித்தனமா விரட்டிய ஆரோன் ஃபின்ச்.. பெர்த் ஸ்கார்ச்சர்ஸிடம் போராடி தோற்ற மெல்பர்ன் ரெனெகேட்ஸ்

By karthikeyan VFirst Published Jan 22, 2023, 6:10 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் நிர்ணயித்த 213 ரன்கள் என்ற கடினமான இலக்கை மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிரடியாக பேட்டிங் ஆடி வெறித்தனமாக விரட்டினார். ஆனாலும் 20 ஓவரில் 202 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது மெல்பர்ன் ரெனெகேட்ஸ்.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று மெல்பர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி:

ஷான் மார்ஷ், மார்டின் கப்டில், சாம் ஹார்ப்பெர் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மேத்யூ க்ரிட்ச்லி, ஜோனாதன் வெல்ஸ், வில் சதர்லேண்ட், ஜாக் பிரெஸ்ட்விட்ஜ், டாம் ரோஜர்ஸ், கோரி ராச்சிசியோலி, டேவிட் மூடி.

இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பெரிய பிரச்னை என்ன..? ரமீஸ் ராஜா அலசல்

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி:

ஸ்டீஃபன் எஸ்கினாஸி, கேமரூன் பான்கிராஃப்ட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் டர்னர் (கேப்டன்), நிக் ஹாப்சன், கூப்பர் கானாலி, மேத்யூ கெல்லி, ஆண்ட்ரூ டை, டேவிட் பெய்ன், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், பீட்டர் ஹாட்ஸோக்லு.

முதலில் பேட்டிங் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டீஃபன் மற்றும் பான்கிராஃப்ட் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி 7.3 ஓவரில் 87 ரன்களை குவித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த ஸ்டீஃபன் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆரோன் ஹார்டி(22), ஜோஷ் இங்லிஸ்(6), டர்னர்(2), நிக் ஹாப்சன் (7) ஆகியோர் ஒருமுனையில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய பான்கிராஃப்ட் 50 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 95 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தும் கூட,  அவரால் சதம் அடிக்க முடியவில்லை. பான்கிராஃப்ட்டின் அபாரமான பேட்டிங்கால் 20 ஓவரில் 212 ரன்களை குவித்தது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி.

சச்சின் - கோலி ஒப்பீடு.. கபில் தேவ் அதிரடி

213 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் 19 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷான் மார்ஷ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து, 34 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சாம் ஹார்ப்பெர் 3 ரன் மட்டுமே அடித்தார். 4ம் வரிசையில் இறங்கிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பவுலிங்கை காட்டடி அடித்த ஃபின்ச் 35 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தும் கூட, மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியால் 20 ஓவரில் 202 ரன்கள் தான் அடிக்க முடிந்தது.

10 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி. 

click me!