வார்னர் ஏமாற்றம்.. ஃபின்ச் பொறுப்பான அரைசதம்..! அயர்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா

By karthikeyan V  |  First Published Oct 31, 2022, 3:26 PM IST

டி20 உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 179 ரன்களை குவித்து 180 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்தது.
 


டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி இன்று நடந்துவருகிறது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

பிரிஸ்பேனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பால்பிர்னி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் அஷ்டான் அகருக்கு பதிலாக ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டார்.

Latest Videos

undefined

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் எடுத்த அந்த முடிவு சரியானதுதானா? இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஓபன்டாக்

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ  வேட்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), லார்கன் டக்கர், ஹாரி டெக்டார், கர்டிஸ் காம்ஃபெர், ஜார்ஜ் டாக்ரெல், காரெத் டிலானி, மார்க் அடைர், பாரி மெக்கார்தி, ஃபியான் ஹேண்ட், ஜோஷுவா லிட்டில்

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஃபின்ச் பொறுப்புடன் நிலைத்து ஆட, மிட்செல் மார்ஷ் 22 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தனர்.

T20 World Cup: இந்தியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா! ஆஸி.,-இங்கி., இடையே கடும் போட்டி

அதன்பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ஆரோன் ஃபின்ச், 44 பந்தில் 63 ரன்கள் அடித்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்தில் 35 ரன்கள் அடித்தார். டிம் டேவிட் 10 பந்தில் 15 ரன்களும், மேத்யூ வேட் 3 பந்தில் 7 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 179 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 180 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!