தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் எடுத்த அந்த முடிவு சரியானதுதானா? இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஓபன்டாக்

By karthikeyan VFirst Published Oct 31, 2022, 2:59 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 18வது ஓவரை அஷ்வினிடம் வழங்கியது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையில் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி பெர்த்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் சூர்யகுமார் யாதவின் அபாரமான அரைசதத்தால் (40 பந்தில் 68 ரன்கள்) 20 ஓவரில் 133 ரன்கள் அடித்தது இந்திய அணி.

134 ரன்கள் என்பது, ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் கண்டிப்பாகவே சவாலான இலக்குதான். அதை தென்னாப்பிரிக்க அணி இலக்கை விரட்டும்போதே பார்க்க முடிந்தது. 24 ரன்களுக்கே தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் மார்க்ரம் - மில்லர் ஜோடி நன்றாக ஆடி 4வது விக்கெட்டுக்கு 76 ரன்களை சேர்த்தனர்.

T20 World Cup: இந்தியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா! ஆஸி.,-இங்கி., இடையே கடும் போட்டி

மார்க்ரம் 52 ரன்களும் மில்லர் 59 ரன்களும் அடிக்க, தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசினர். ஆனால் படுமோசமான ஃபீல்டிங்கின் விளைவாகத்தான் இந்திய அணி தோற்றது. மார்க்ரமிற்கு 2 கேட்ச்கள் தவறவிடப்பட்டன. மார்க்ரம் மற்றும் மில்லரின் ரன் அவுட்டை ரோஹித் சர்மா தவறவிட்டார். இப்படியாக மோசமான ஃபீல்டிங்கின் காரணமாகத்தான் அவர்கள் அரைசதம் அடித்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற செய்தனர்.

பெர்த் ஆடுகளத்தில் ஃபாஸ்ட் பவுலிங் தான் சவாலாக இருந்தது. அதனால் இரு அணி வீரர்களுமே ஸ்பின்னர்களைத்தான் அடித்து ஆடினர். அப்படியிருக்கையில், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் 18வது ஓவரை அஷ்வினிடம் கொடுத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அந்த ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியிருந்தாலும், அந்த ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி இந்தியாவிடமிருந்து வெற்றியை கிட்டத்தட்ட பறித்தார் மில்லர்.

IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை மட்டமான ஃபீல்டிங்கால் தோற்ற இந்தியா

களத்தில் செட்டில் ஆகியிருந்த டேவிட் மில்லர் களத்தில் இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் 18வது ஓவரை அஷ்வினிடம் கொடுத்தது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, அஷ்வினுக்கு எப்படியும் ஒரு ஓவர் கொடுத்துத்தான் ஆகவேண்டும். கடைசி ஓவரை ஸ்பின்னரிடம் கொடுத்தால் என்ன ஆகும் என்று நான் பார்த்திருக்கிறேன். கடைசி ஓவர்களை ஃபாஸ்ட் பவுலர்களை வீசவைக்க நினைத்தேன். எப்படியும் அஷ்வினை ஒரு ஓவர் வீசவைத்தே ஆகவேண்டும். புதிய பேட்ஸ்மேன் களத்தில் இருந்ததால் அதுதான் அஷ்வினை பயன்படுத்த சரியான நேரம் என நினைத்தேன். ஆனால் மில்லர் சில பெரிய ஷாட்களை ஆடிவிட்டார் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
 

click me!