செம பவுலிங்.. அவுட்டாக்குன பும்ராவை கைதட்டி பாராட்டிய ஆரோன் ஃபின்ச்..! வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Sep 24, 2022, 3:02 PM IST
Highlights

தனது லெக் ஸ்டம்ப்பை பிடுங்கி க்ளீன் போல்டாக்கி தன்னை வெளியேற்றிய ஜஸ்ப்ரித் பும்ராவின் பவுலிங்கை ஆரோன் ஃபின்ச் கைதட்டி பாராட்டிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நாக்பூரில் நடந்தது. இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் 8 ஓவர்களாக குறைத்து போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். காயத்திலிருந்து மீண்ட பும்ரா இந்த போட்டியில் ஆடினார். பும்ரா எப்படி பந்துவீசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அருமையாக பந்துவீசினார். அதிரடியாக பேட்டிங்  ஆடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை துல்லியமான யார்க்கரின் மூலம் ஸ்டம்ப்பை கழட்டி 31ரன்களுக்கு வெளியேற்றினார் பும்ரா.

இதையும் படிங்க - ரோஹித் அதிரடி பேட்டிங்; தினேஷ் கார்த்திக் தரமான ஃபினிஷிங்! 2வது டி20யில் ஆஸி.,யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

யார்க்கருக்கு பெயர் போன பும்ரா, தனது துல்லியமான யார்க்கரின் மூலம் ஃபின்ச்சை நிராயுதபாணியாக்கி வீழ்த்தினார். பும்ரா வீசிய அந்த யார்க்கர் பந்தை தடுக்க ஃபின்ச் பேட்டை கீழே கொண்டுவருவதற்கு முன்பாகவே பந்து ஸ்டம்ப்பை கழட்டிவிட்டது. அந்த அபாரமான பந்தை கண்டு வியந்துபோன ஆரோன் ஃபின்ச், அவுட்டாகி செல்லும்போது பும்ராவின் பவுலிங்கை கைதட்டி பாராட்டி விட்டு சென்றார். அதுதான் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Aaron Finch applauding pic.twitter.com/DHky72zm1T

— Aakash Srivastava (@Cursedbuoy)

அதேபோல மற்றுமொரு துல்லியமான யார்க்கர் வீசி ஸ்டீவ் ஸ்மித்தை நிலைதடுமாற செய்தார் பும்ரா. 8 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 90 ரன்கள் அடிக்க, ரோஹித் சர்மாவின் அதிரடியான பேட்டிங்காலும்(20 பந்தில் 46* ரன்கள்), தினேஷ் கார்த்திக்கின் தரமான ஃபினிஷிங்காலும் 8வது ஓவரின் 2வது பந்தில் இலக்கை அடித்து இந்திய அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - ஜடேஜாவை கேட்ட 2 ஐபிஎல் அணிகள்.. நோ சொன்ன சிஎஸ்கே..! சிஎஸ்கேவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் ஜடேஜா
 

click me!