IPL 2021 மும்பை இந்தியன்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்களில் மாற்றம்..! MI மற்றும் RCB அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Sep 26, 2021, 6:21 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனில் இன்றிரவு துபாயில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. இந்த 2 அணிகளுமே இந்த சீசனின் 2ம் பாகத்தில் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், அமீரகத்தில் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்வதுடன், பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்ய இந்த 2 அணிகளுக்குமே வெற்றி முக்கியம் என்பதால், வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன.

இந்த போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். வெளிநாட்டு வீரர்கள் காம்பினேஷனில் ஒரு மாற்றத்தை பரிந்துரைக்கிறார் ஆகாஷ் சோப்ரா. நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னேவை நீக்கிவிட்டு, ஆஸி., அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் லின்னை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர் மில்னேவிற்கு பதிலாக ஒரு பவுலராக குல்கர்னியை சேர்த்துவிட்டு, குல்கர்னி சேர்க்கப்படுவதால் சவுரப் திவாரியை நீக்க வேண்டும் என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா(கேப்டன்), கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா, தவால் குல்கர்னி, டிரெண்ட் போல்ட்.

ஆர்சிபி அணியில், இலங்கை ஸ்பின்னர் ஹசரங்காவை நீக்கிவிட்டு, இலங்கை ஃபாஸ்ட் பவுலர் துஷ்மந்தா சமீராவை சேர்க்கவேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் கடந்த போட்டியில் ஆடாத கைல் ஜாமிசனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத்(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷபாஸ் அகமது, கைல் ஜாமிசன், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், சாஹல், துஷ்மந்தா சமீரா.
 

click me!