நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தவல்ல உலக லெவன்..! ஆகாஷ் சோப்ராவின் தேர்வு.. கிங் கோலிக்கு இடம் இல்ல

Published : Jun 29, 2021, 04:32 PM IST
நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தவல்ல உலக லெவன்..! ஆகாஷ் சோப்ராவின் தேர்வு.. கிங் கோலிக்கு இடம் இல்ல

சுருக்கம்

நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்த தகுதியான உலக லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.  

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி உலகின் சிறந்த டாப் அணியாக திகழ்கிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் அணியாக கோலோச்சுகிறது. சொந்த மண்ணில் எந்த எதிரணியாலும் வீழ்த்த முடியாத அபரிமிதமான சக்தியாக திகழும் நியூசிலாந்து அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. அதற்கு முன்பாக இங்கிலாந்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இவ்வாறாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், அதுவும் சொந்த மண்ணில் அசைக்கமுடியாத சக்தியாக திகழும் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தவல்ல உலக லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் விராட் கோலியை தேர்வு செய்யவில்லை.

நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தவல்ல, ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த உலக டெஸ்ட் லெவன்:

ரோஹித் சர்மா(இந்தியா), திமுத் கருணரத்னே(இலங்கை), மார்னஸ் லபுஷேன்(ஆஸ்திரேலியா), ஜோ ரூட்(கேப்டன், இங்கிலாந்து), ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலியா), பென் ஸ்டோக்ஸ்(இங்கிலாந்து), ரிஷப் பண்ட்(இந்தியா - விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின்(இந்தியா), பாட் கம்மின்ஸ்(ஆஸ்திரேலியா), ஸ்டூவர்ட் பிராட்(இங்கிலாந்து), ஜோஷ் ஹேசில்வுட்(ஆஸ்திரேலியா).
 

PREV
click me!

Recommended Stories

Virat Kohli: சாதனைக்காக விளையாடினால் என்ன நடக்கும் தெரியுமா? மனம் திறந்த 'கிங்' கோலி!
Virat Kohli Records: கிங் கோலியின் ருத்ரதாண்டவம்.. ஒரே செஞ்சரியில் பல ரெக்கார்டுகள் காலி!