டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும்? காம்ரான் அக்மல் கணிப்பு

By karthikeyan VFirst Published Jun 29, 2021, 3:53 PM IST
Highlights

டி20 உலக கோப்பையை வெல்ல எந்த அணிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்று காம்ரான் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபரில் தொடங்குகிறது. இந்த உலக கோப்பை இந்தியாவில் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி20 உலக கோப்பையை இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று பிசிசிஐ, ஐசிசியிடம் தெரிவித்துவிட்டது.

எனவே இந்த டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக அமீரகத்தில் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் நடக்கவுள்ளன. ஐபிஎல் எஞ்சிய தொடர் முடிந்ததும், டி20 உலக கோப்பை அமீரகத்தில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பையை வெல்ல எந்த அணிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து காம்ரான் அக்மல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய காம்ரான் அக்மல், டி20 உலக கோப்பை பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் கடந்த 9-10 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தைத்தான் ஹோம் கிரவுண்டாக பாவித்து பாகிஸ்தான் ஆடிவருகிறது. எனவே அந்த கண்டிஷனில் பாகிஸ்தான் வீரர்களுக்கு நல்ல அனுபவம் இருப்பது அவர்களுக்கு சாதகம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான்  வீரர்களுக்கு அமீரகத்தில் நல்ல அனுபவம் உள்ள அதேவேளையில், ஐபிஎல், பாகிஸ்தான்  சூப்பர் லீக் ஆகிய தொடர்களில் ஆடுவதன் மூலம், மற்ற நாட்டு வீரர்களுக்கும் அமீரக கண்டிஷன் தெரியும். ஆஃப்கானிஸ்தானும் அபாயகரமான அணி என்பதை நிரூபித்துள்ளது. எனவே டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று கணிப்பது கடினமான காரியம் என்று காம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
 

click me!