#WIvsRSA 3வது டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jun 29, 2021, 2:41 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தென்னாப்பிரிக்கா வென்றது. டி20 தொடரையாவது வென்றாக வேண்டும் என்ற உறுதியில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வென்றது. ஆனால் 2வது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்தது. 3வது போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது இந்த போட்டி. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

எவின் லெவிஸ், ஆண்ட்ரே ஃப்ளெட்சர், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), பொல்லார்டு(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிராவோ, ஃபேபியன் ஆலன், ஒபெட் மெக்காய், கெவின் சின்க்லெர்.

உத்தேச தென்னாப்பிரிக்க அணி:

ரீஸா ஹென்ரிக்ஸ், குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா(கேப்டன்), வாண்டெர் டசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், ஜார்ஜ் லிண்டே, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, ஷாம்ஸி, இங்கிடி.
 

click me!