IPL 2021 கேகேஆர் கேப்டனையே தூக்கணும்; அப்பதான் ஜெயிக்கலாம்..! 2 மாற்றங்களை பரிந்துரைத்த ஆகாஷ் சோப்ரா

By karthikeyan VFirst Published Oct 3, 2021, 6:25 PM IST
Highlights

கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, இந்த போட்டியில் எந்த அணி வெல்லும் என்று ஆருடமும் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் புள்ளி பட்டியலில் சுவாரஸ்யமாக உள்ளது. லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்று சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது கேகேஆர் அணி. சன்ரைசர்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகிவிட்டதால், அந்த அணிக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் கேகேஆர் அணிக்கு இந்த போட்டி மிக முக்கியம்.

இந்த போட்டிக்கான கேகேஆர் அணியில் ஆகாஷ் சோப்ரா 2 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார். கேகேஆர் அணியின் கேப்டன் மோர்கன் ஃபார்மில் இல்லாமல் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பிவரும் நிலையில், அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஷகிப் அல் ஹசனை தேர்வு செய்துள்ள  ஆகாஷ் சோப்ரா, அவரையே கேப்டனாக நியமிக்குமாறு பரிந்துரைத்துள்ளார். ஆனால் இந்த மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் ஒரு பேட்ஸ்மேனாக மோர்கன் சொதப்பினாலும், கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுவருவதால் அவர் நீக்கப்பட வாய்ப்பேயில்லை.

அடுத்ததாக டிம் சேஃபெர்ட்டை நீக்கிவிட்டு ஆல்ரவுண்டர் பென் கட்டிங்கை சேர்க்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஷகிப் அல் ஹசன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), பென் கட்டிங், சுனில் நரைன், டிம் சௌதி, வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி. 

சன்ரைசர்ஸ் அணியில் எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்கவில்லை. வேண்டுமென்றால் சித்தார்த் கவுலுக்கு பதிலாக கலீல் அகமது ஆடலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), அபிஷேக் ஷர்மா, பிரியம் கர்க், அப்துல் சமாத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல்/கலீல் அகமது.

இந்த போட்டியில் கேகேஆர் தான் ஜெயிக்கும் என்றும் ஆருடம் தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

click me!