IPL 2021 நல்லா அவுட்டுனு தெரிஞ்சதையே அவுட் கொடுக்காத டிவி அம்பயர்! கேஎல் ராகுல், பஞ்சாப் அணி கடும் அதிருப்தி

By karthikeyan VFirst Published Oct 3, 2021, 4:40 PM IST
Highlights

நன்றாக அவுட் என்று தெரிந்ததற்கு, தேர்டு அம்பயர் அவுட் கொடுக்காதது பஞ்சாப் கிங்ஸ் அணியினருக்கும் கேப்டன் கேஎல் ராகுலுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 

ஐபிஎல் 14வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி ஷார்ஜாவில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கோலியும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 9.4 ஓவரில் 68 ரன்களை சேர்த்தனர். கோலி 25 ரன்னிலும், டேனியல் கிறிஸ்டியன் ரன்னே அடிக்காமலும் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

தேவ்தத் படிக்கல்லுடன் க்ளென்  மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். படிக்கல்லை 8வது ஓவரில் ரவி பிஷ்னோய் வீழ்த்தியிருக்க வேண்டியது. அந்த ஓவரின் 3வது பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடமுயன்றார் படிக்கல். ஆனால் பந்து கையுறையை உரசிச்சென்றது. அதை கேட்ச் பிடித்த பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான ராகுல் அப்பீல் செய்ய, அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.

பந்து கண்டிப்பாக பேட்டையோ கையுறையையோ உரசியது என்று உறுதியாக நம்பிய ராகுல், உடனடியாக ரிவியூ செய்தார். அதை ரிவியூ செய்த டிவி அம்பயர், பந்து கையுறையில் உரசிச்சென்றதை பரிசீலிக்காமல், பேட்டில் படவில்லை என்பதை மட்டுமே கருத்தில்கொண்டு, நாட் அவுட் என்று கூறிவிட்டார். பந்து கையுறையை கடந்தபோது, அல்ட்ரா எட்ஜில் தெளிவான ஸ்பைக் தெரிந்தது. ஆனாலும் டிவி அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.

அல்ட்ரா எட்ஜில் ஸ்பைக் தெரிந்ததை சுட்டிக்காட்டி கள நடுவரிடம் நியாயம் கேட்டார் ராகுல். ஆனால் அது எடுபடவில்லை. இதையடுத்து ராகுலும் பஞ்சாப் கிங்ஸ் அணியினரும் அதிருப்தி அடைந்தனர்.

ஆனாலும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை படிக்கல். 12வது ஓவரில் ஹென்ரிக்ஸின் பந்தில் 40 ரன்னில் ஆட்டமிழந்தார் படிக்கல்.
 

click me!