#IPL2021 டெல்லி கேபிடள்ஸின் பெஸ்ட் பிளேயிங் லெவன்..! முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு

Published : Apr 06, 2021, 01:53 PM IST
#IPL2021 டெல்லி கேபிடள்ஸின் பெஸ்ட் பிளேயிங் லெவன்..! முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனுக்கான சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. கடந்த சீசனில் முதல் முறையாக ஃபைனலுக்கு முன்னேறிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த சீசனில் ஆடவில்லை. எனவே ரிஷப் பண்ட் தலைமையில் இந்த சீசனில் ஆடுகிறது டெல்லி கேபிடள்ஸ் அணி.

இந்நிலையில், இந்த சீசனுக்கான ஒவ்வொரு அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்து தெரிவித்துவரும் ஆகாஷ் சோப்ரா, டெல்லி கேபிடள்ஸின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார்.

பிரித்வி ஷா - ஷிகர் தவான் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாகவும் 3ம் வரிசையில் ரஹானே, 4ம் வரிசையில் கேப்டன் ரிஷப் பண்ட்டையும் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, அடுத்தடுத்த பேட்டிங் ஆர்டரில் ஷிம்ரான் ஹெட்மயர் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

அக்ஸர் படேல் கொரோனா காரணமாக முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் ஆடமாட்டார். இந்நிலையில், ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் அக்ஸர் படேல்/அமித் மிஷ்ரா ஆகிய இருவரில் ஒருவரையும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஃபாஸ்ட் பவுலர்களாக தென்னாப்பிரிக்காவின் ரபாடா மற்றும் நோர்க்யா ஆகிய இருவருடன் 3வது பவுலராக இஷாந்த் சர்மா/உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல்/அமித் மிஷ்ரா, ரவிச்சந்திரன் அஷ்வின், நோர்க்யா, ரபாடா, இஷாந்த் சர்மா/உமேஷ் யாதவ்.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?