#IPL2021 ஐபிஎல் நெருங்கும் வேளையில் பெரும் அச்சுறுத்தல்.. மேலும் 14 பேருக்கு கொரோனா..!

By karthikeyan VFirst Published Apr 6, 2021, 1:26 PM IST
Highlights

பிராட்கேஸ்ட் டீமை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஐபிஎல் நடக்கிறது. அகமதாபாத்தை தவிர மற்ற 5 நகரங்களில் லீக் போட்டிகள் நடப்பதால், அனைத்து அணிகளும் முதல் போட்டியில் ஆடும் ஊர்களில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டுவருகின்றன.

இதற்கிடையே, ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள், அணி நிர்வாகிகள் என பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவருகிறது. கேகேஆர் வீரர் நிதிஷ் ராணா, மும்பை மைதான ஊழியர்கள் சிலர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அக்ஸர் படேல், சிஎஸ்கே அணியின் சமூக ஊடக நிர்வாகி என பலருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்ததால் அவர்கள் குவாரண்டினில் உள்ளனர்.

ஆர்சிபி அணியின் இளம் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு கடந்த மாதம் 22ம் தேதி கொரோனா உறுதியானதாகவும் அவர் குவாரண்டினில் இருப்பதாகவும் அவரை மருத்துவர் குழு கண்காணித்துவருவதாகவும் நேற்று ஆர்சிபி அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்த ஐபிஎல் பிராட்கேஸ்ட் டீமை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிராட்கேஸ்ட் இயக்குநர்கள், ஈவிஎஸ் ஆபரேட்டர்கள், தயாரிப்பாளர்கள், கேமராமேன், வீடியோ எடிட்டர்கள் என 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் உறுதியாகிவரும் கொரோனா பாசிட்டிவ் கேஸ்களில் பாதிக்குப்பாதி மகாராஷ்டிரா மாநிலத்தில் தான். அந்தளவிற்கு மகாராஷ்டிராவிலும் அதன் தலைநகர் மும்பையிலும் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. ஆனாலும், மும்பையில் திட்டமிடப்பட்ட போட்டிகளை மும்பையிலேயே நடத்துவதில் உறுதியாக உள்ளது பிசிசிஐ. இப்போது பிராட்கேஸ்ட் டீமை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
 

click me!