ஐபிஎல் 15வது சீசனில் 2 அணிகளை கூடுதலாக சேர்த்தால் பலனடையும் 10 வீரர்கள்..!

By karthikeyan VFirst Published May 27, 2021, 3:11 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு, 10 அணிகள் ஆடினால், அதன்மூலம் பலனடையும் 10 வீரர்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்த நிலையில், சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட மீத போட்டிகள், செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் நடத்தப்படவுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் புத்துணர்ச்சியுடன் நடத்தப்படவுள்ளது. அடுத்த சீசனில் 2 அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 10 அணிகளுடன் ஆடப்படும் என்று தெரிகிறது. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்படவுள்ளது.

ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவருகின்றன. சிஎஸ்கே, ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடள்ஸ், கேகேஆர் ஆகிய 8 அணிகள் ஆடுகின்றன. அடுத்த சீசனில் 2 அணிகளை கூடுதலாக சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

அப்படி 2 அணிகள் சேர்க்கப்பட்டால், எந்த 10 வீரர்கள் பலனடைவார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

கேகேஆர் அணியில் ஆடிவந்த குல்தீப் யாதவை அந்த அணி கழட்டிவிட, ஐபிஎல் 14வது சீசனில் அவரை ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கவில்லை. எனவே கூடுதல் அணிகள் சேர்க்கப்பட்டால் பலனடையும் வீரர்களில் முதன்மையானவர் அவர் தான் என்று தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

அதேபோல ரஹானே, ஷ்ரேயாஸ் கோபால் ஆகிய இந்திய வீரர்களும், கிறிஸ் லின், லாக்கி ஃபெர்குசன், மிட்செல் சாண்ட்னெர், சந்தீப் லாமிஷேன், டிம் சேஃபெர்ட், ஜேசன் ராய், ஜோ ரூட் ஆகிய வீரர்களுக்கும் ஐபிஎல்லில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் 2 கூடுதல் அணிகள் மூலம் பலனடையும் வீரர்களாக ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த வீரர்கள்:

குல்தீப் யாதவ், கிறிஸ் லின், ஃபெர்குசன், மிட்செல் சாண்ட்னெர், ரஹானே, ஷ்ரேயாஸ் கோபால், சந்தீப் லாமிஷேன், டிம் சேஃபெர்ட், ஜேசன் ராய், ஜோ ரூட்.
 

click me!