#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் எங்கு, எப்போது நடத்தப்படும்..?

Published : May 26, 2021, 10:28 PM IST
#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் எங்கு, எப்போது நடத்தப்படும்..?

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் எங்கு, எப்போது நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், ஐபிஎல்லில் ஆடிய சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஐபிஎல் 14வது சீசனில் இன்னும் 31 போட்டிகள் நடத்த வேண்டியுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்டம்பர் 14ம் தேதி முடிவடையவுளது. அதன்பின்னர் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது.

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்தில் கண்டிப்பாக நடத்தப்போவதில்லை என்பது ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் ஐபிஎல் நடத்தப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 13வது சீசன் முழுவதும் அமீரகத்தில் தான் ஆடப்பட்டது. செப்டம்பர் 16-20ல் தொடங்கி, அக்டோபர் 9-10ல் முடிக்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs ENG 2nd T20: இனி சான்ஸ் இல்ல! சஞ்சு சாம்சன் நீக்கம்? இளம் புயல் உள்ளே! இந்தியா பிளேயிங் லெவன்!
IND vs ENG 1st T20: மழை வந்தாலும் சிக்சர் மழையில் அபிஷேக் சர்மா உலக சாதனை! ஷ்ரேயாஸ் ஐயரும் மெகா ரிக்கார்ட்!