#INDvsNZ டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: இங்கிலாந்து கண்டிஷன் எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்..? கம்மின்ஸ் கருத்து

By karthikeyan VFirst Published May 27, 2021, 2:27 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவுள்ள நிலையில், அந்த போட்டி நடக்கும் இங்கிலாந்தின் கண்டிஷன் நியுசுசிலாந்துக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் தான் என்றாலும், இங்கிலாந்து கண்டிஷன் நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என்று மைக்கேல் வான் கூறிய அதே கருத்தைத்தான் ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் குறித்து பேசிய பாட் கம்மின்ஸ், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மிகச்சிறந்த போட்டியாக இருக்கும். இங்கிலாந்து கண்டிஷன் நியூசிலாந்துக்குத்தான் சாதகமாக இருக்கும். போட்டி மிகக்கடுமையாகவே இருக்கும். கண்டிஷன் மட்டும் இந்தியாவைவிட நியூசிலாந்துக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று கம்மின்ஸ் கூறியுள்ளார்.
 

click me!